'உன்னை போல் ஒருவன்" படத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'மர்மயோகி" படத்திற்கு தரப்பட்ட ரூ. 10.90 கோடி முன்பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், அதுவரை உன்னைப் போல் ஒருவன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி பிரமிட் சாய்மீரா பட நிறுவனம் சார்பில் கமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்படது.
இந்நிலையில் இன்று நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கமல் சார்பில் அவரது வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,
'உன்னை போல் ஒருவன்" படத்திற்கு தடை விதிக்கக் கூடாது. திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தடை விதித்தால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும் ரசிகர்களும் ஏமாற்றமடைவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.