சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 15, 2011, 12:18 [IST]
MGR Temple
புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர்.

திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எம்ஜிஆர்.

அவரது ஆட்சிமுறையை அன்றைக்கு விமர்சித்த அத்தனை பேரும், இன்று எம்ஜிஆரின் ஆட்சிக் காலமே பொற்காலம் என புகழ்கிறார்கள். அன்று எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களே இன்று புகழ்பெற்று விளங்குகின்றன.

சத்துணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள், 108 ஆம்புலன்ஸ் போன்றவை எம்ஜிஆர் அன்றைக்கே கொண்டுவந்த திட்டங்களில் சில.

இன்றைக்கு எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், அவரை கடவுளாக்கி, கோயில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

சென்னை அருகே திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் சமீபத்தில் அவர் பெயரில் புதிதாக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இதில் 1.5 லட்சம் ரூபாய் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டன என்றார்.

இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா சுதந்திர திருநாளான இன்று நடந்தது.

அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதினர்.பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
English summary
Hardcore fans of late legend MGR built a temple for their 'god MGR' at Thirunindravur, Chennai. The inaugural ceremony of the temple was held in grand manner today with holy Kumbabhisheka.
User Comments
Chandru KRISHNA 15 Aug 2011 03:06 pm
இன்று நாம் கும்பிடும் கடவுள்கள் அல்லது மத தத்துவங்கள் அதன் பின்னணி நமக்கு சொல்லப்பட்ட விசித்திரமான கதைகள் வேடிக்கையான சம்பவங்கள் நம்பவே முடியாத ஆதாரங்கள் போன்றவற்றை "கடவுள்" என்ற ஒற்ற சொல்லில் எல்லா மதவாதிகளும் அவர்களுடன் சேர்ந்து அரசியல்வாதிகளும் தமிழர்களாகிய நம்மை ஏமாற்றி அவர்கள் மதங்கள் மூலமாக நாம் இறைவனை வழிபடும் போது........ "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பாடிய பார் போற்றும் பகலவனை உலக தமிழ் சங்கம் கண்டு உலக தமிழ் மாநாடு நடத்திய நடந்தால் ஊர்வலம் நின்றால் பொதுக்கூட்டம் பேசினால் மாநாடு....
Chandru KRISHNA 15 Aug 2011 02:37 pm
தற்போது நடைமுறையில் உள்ள 3 மதங்களின் கட்டாய திணிப்பின் காரணமாக சாதியால், மதத்தால், அறியாமையால் பிரிந்து கிடக்கும் தமிழினம் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திர சொல்லே மதமாகி ஒரே குடையின் கீழ் ஒன்று கூடி தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சூழல் உருவாகாமல போய்விடும்? இன்று சொல்லப்படும் என் கருத்து இன்று வேண்டுமானால் சில பேருக்கு அபத்தமாக தோன்றலாம். ஆனால், விருப்பு வெறுப்புமின்றி வரலாற்றை சற்றே திரும்பி பார்த்தோம் என்றால், உண்மை விளங்கும்! - தொடரும்......
Chandru KRISHNA 15 Aug 2011 03:10 pm
இன்று நாம் கும்பிடும் கடவுள்கள் அல்லது மத தத்துவங்கள் அதன் பின்னணி நமக்கு சொல்லப்பட்ட விசித்திரமான கதைகள் வேடிக்கையான சம்பவங்கள் நம்பவே முடியாத ஆதாரங்கள் போன்றவற்றை "கடவுள்" என்ற ஒற்ற சொல்லில் எல்லா மதவாதிகளும் அவர்களுடன் சேர்ந்து அரசியல்வாதிகளும் தமிழர்களாகிய நம்மை ஏமாற்றி அவர்கள் மதங்கள் மூலமாக நாம் இறைவனை வழிபடும் போது........ "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பாடிய பார் போற்றும் பகலவனை உலக தமிழ் சங்கம் கண்டு உலக தமிழ் மாநாடு நடத்திய நடந்தால் ஊர்வலம் நின்றால் பொதுக்கூட்டம் பேசினால் மாநாடு....
Chandru KRISHNA 15 Aug 2011 03:25 pm
"நடந்தால் ஊர்வலம் நின்றால் பொதுக்கூட்டம் பேசினால் மாநாடு" என்று வாழ்ந்த நிசமான சரித்திரம் ஏன் மதமாக மாறக்கூடாது? இறைவனை வணங்குவதற்கு ஒரு மதம் வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கிறபோது தமிழர்களாகிய நமக்கென்று ஓர் மதம் இல்லாதபோது, ஏன் "எம்.ஜி.ஆர். என்கிற உற்சாக ஊற்று" வருங்காலத்தில் நமக்கு புத்துணர்ச்சி தரும் புதிய அர்த்தமுள்ள மதமாக மாறக்கூடாது? "இந்து-முஸ்லிம்-கிறிஸ்டியன்-இந்தியன்-திராவிடன்-வன்னியன்-தலித்-முதலியார்-தேவர்-கவுண்டர்" என வாழ்ந்தது போதுமடா சாமி என்று தமிழர்கள் எண்ணக்கூடிய காலம்.........
Chandru KRISHNA 15 Aug 2011 10:36 pm
. "இந்து-முஸ்லிம்-கிறிஸ்டியன்-இந்தியன்-திராவிடன்-வன்னியன்-தலித்-முதலியார்-தேவர்-கவுண்டர்" என வாழ்ந்தது போதுமடா சாமி என்று தமிழர்கள் எண்ணக்கூடிய காலம் வராமலா போய்விடும்? காலம் எதன் மீதும் தவறான தீர்ப்பு எழுதிவிடாது.........
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST