ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் அஜீத்- நயன்- ஆர்யா!

புதன்கிழமை, பிப்ரவரி 8, 2012, 11:17 [IST]
சொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜீத்தின் படத்தை இயக்குகிறார். பில்லா 2-க்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் இது.

இசை: யுவன் சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தாண்டவம் படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம்.

இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம். ஆனால் அவரது சரிவு, பாய்ஸ் படத்தில் ஆரம்பித்தது. அதன் பிறகு கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என குறிப்பிடத்தக்க வெற்றிகள் வந்தாலும், எனக்கு 20 உனக்கு 18, தர்மபுரி, கேடி என அடுத்தடுத்த தோல்விகள் அவரை படத்தயாரிப்புக்கு தற்காலிக இடைவெளி விட வைத்தன.

இந்தப் 75 நாட்களுக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், வரும் தீபாவளி 2012-ல் வெளியிட்டுவிடலாம் என ரத்னத்துக்கு உறுதி அளித்துள்ளாராம்.

முக்கியமான சமாச்சாரம்... இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடி நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். பிரபு தேவாவைப் பிரிந்த செய்தியை சொல்லாமல் சொல்ல ஒப்புக் கொண்ட தமிழ்ப் படமும் கூட!

இன்னொரு முக்கிய விஷயம்... படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார், ஆர்யா!

English summary
It is confirmed that Ajith has confirmed a film for producer AM Ratnam which will be directed by one of his close buddies Vishnuvardhan. Nayanthara is playing Ajith's pair in this movie and Arya also shares the screen for the first time with Thala!
User Comments
azeez fairo 16 Feb 2012 10:54 pm
தல 2012 ல நீதான் சூப்பர் டுப்பர் ஹீரோ ..............
sathyan 08 Feb 2012 06:33 pm
இந்த படம் முலம் இரத்னம் அவர்கள் மீண்டும் வளர எனுடைய வாழ்த்துக்கு கல் சத்யன் முணர்
வர்ணாசிரம எதிரி 08 Feb 2012 06:00 pm
அஜித்,ஆரியா,நயன்தாரா,விஸ்ணு வரத்தான் என்று 4 மல்லுக்கள் ஒரே நேரத்தில் இனைந்து கலக்கும் "இருட்டுக்குள்ள முரட்டு குத்து"
mamzar 08 Feb 2012 12:31 pm
வெற்றி உன் பக்கம் தல நீ ஆடு தல
Shanmuga 08 Feb 2012 01:18 pm
un padam eppadi irundhaalum engalin annan, vazhikaatti neeye thala !
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST