Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'மிரட்டலோடு' வரும் மாதேஷ்!

Posted by:
Published: Friday, April 6, 2012, 13:38 [IST]

Madesh S New Movie Mirattal Aid0136

மாதேஷ்... ஷங்கருக்கு நிகரான பிரமாண்ட இயக்குநர்தான் என்றாலும், ஷங்கர் அளவுக்கு ஜொலிக்காமல் போனவர்.

மதுர, அரசாங்கம் என இரண்டு படங்கள் இவரது இயக்கத்தில் வெளியாகின. அரசாங்கம் படத்துக்குப் பிறகு, ஆள் எங்கே என்று தேட வேண்டிய நிலை.

'இல்லை இல்லை... நான் இன்னும் பீல்டில்தான் இருக்கிறேன்' என்று கூறும் வகையில் தன் அடுத்த படம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார் அதிகாரப்பூர்வமாக.

படத்தின் பெயர் மிரட்டல்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்தது. லண்டன், ஆக்ஸ்போர்டு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டது. ஒரு பெண்ணை விமானத்தில் கடத்துவது போன்ற காட்சியை சமீபத்தில் லண்டனில் தத்ரூபமாகப் படமாக்கினார் மாதேஷ்.

வினய், புதுமுகம் தீபிகா, சந்தானம், பிரபு, பாண்டியராஜன் உள்பட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பான ஆக்ஷன் காமெடியாக உருவாகும் இந்தப் படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுகிறது.

English summary
Vijay's 'Madura' and Vijaykanth's Arasangam fame director Madesh is gearing up to release his next movie 'Mirattal.'
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST