Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கமலுடன் கும்கி டீம் சந்திப்பு - இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு

Posted by:
Published: Tuesday, July 24, 2012, 12:13 [IST]

Kumki Team Invites Kamal Haasan

சென்னை: கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழா அழைப்பிதழ் கோலிவுட்டின் சினிமா ஆர்வலர்கள் பலரையும் வியப்பிலாழ்த்தியிருக்கிறது. காரணம் அதன் ஆடம்பரம் அல்ல... அழகு!

இந்தியாவில் இப்படியெல்லாம் கூட அழகான பிரதேசங்கள் இருக்கின்றவா என்று கேட்க வைத்துள்ளது, அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள வனப்பகுதிகளின் புகைப்படங்கள்.

படத்தின் மீது புதிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது இந்த அழைப்பிதழ்.

நாளை மறுநாள் நடக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாஸனை நேரில் சந்தித்து இந்த அழைப்பிதழைக் கொடுத்தபோது, அந்தப் படங்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்த கமல், இயக்குநர் பிரபு சாலமனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினாராம். அவரது அதிகபட்ச பாராட்டு அது!

அருகில் அழைத்து தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டவர், படம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம்.

பின்னர், நடிகர் பிரபு (அவர் மகன் விக்ரம் பிரபுதான் ஹீரோ), படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் கமல்.

சத்யம் திரையரங்கில் காலை 9 மணிக்கு நடக்கும் இந்த இசைவெளியீட்டு விழாவில் கமல்தான் சிறப்பு விருந்தினர். முதல் இசை குறுந்தகட்டை அவர் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார்.

English summary
Kumki Team met Kamal Haasan and invite him for the Audio Launch of the movie.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter