சென்னை: ரஜினி என்றால் ஸ்டைல், பிரமாண்ட வியாபாரம் என்பதோடு சமீப காலமாக அவரை வைத்து இணையங்களைக் கலக்கி வரும் நகைச்சுவைத் துணுக்குகளும் அடக்கம். ரஜினியை வைத்து எக்கச்சக்க ஜோக்குகள் இணையங்களை வலம் வந்தவண்ணம் உள்ளன.
எல்லாமே ரஜினியை சூப்பர்மேனாக சித்தரித்து கொடுக்கப்பட்டுள்ள ஜோக்குகள்தான். சூரியனே கூட ரஜினியைப் பார்த்து அச்சப்படுமாம். அதேபோல் ரஜினி மட்டும் 150 வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவில் பிறந்திருந்தா இங்கிலாந்துக்காரன் இந்நேரம் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருப்பான் என்பது மாதிரியான ஜோக்குகள்தான்.
ரஜினியே கூட இதைப் படித்து விட்டு வயிறு வலிக்க வலிக்க சிரிக்கலாம். அப்படி ஒரு ஹிலாரியஸான ஜோக்குகள் இவை.. ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்களுக்காக அவரைப் பற்றிய சில ஜோக்குகள்..
சூரியனே செத்துப் போய்ட்டான்!
சூரியனே செத்துப் போய்ட்டான்!
தலைவர் சூரியனை கொஞ்ச நேரம் உத்துப் பாத்தாரு... அடுத்த செகன்ட் சூரியனே செத்துப் போயிருச்சு...!
தலைவர் விட்ட உதைல ஆயிருச்சு டிரையாங்கிள்
தலைவர் விட்ட உதைல ஆயிருச்சு டிரையாங்கிள்
முதல்ல பெர்முடா ஸ்கொயர்னுதான் இருந்துச்சு.. தலைவர் போய் ஒரு பக்கமாக உதை விட்டதுல ஸ்கொயர், டிரையாங்கிளா மாறிடுச்சு...
கண்ணாடி தலைவருக்கு இல்லை, சூரியனுக்கு
கண்ணாடி தலைவருக்கு இல்லை, சூரியனுக்கு
தலைவர் போட்ருக்கிற கூலிங் கிளாஸ் அவரோட கண்ணைப் பாதுகாக்க இல்லை கண்ணா, சூரியனைப் பாதுகாக்க.
நியூட்டன் எப்படி செத்தாரு தெரியுமா...
நியூட்டன் எப்படி செத்தாரு தெரியுமா...
கண்ணா, நியூட்டன் எப்படிச் செத்தாருன்னு தெரியுமா... ரஜினி படத்தைப் பார்த்துத்தான். தன்னோட இயற்பியல் விதிகள் அத்தனையையும் ரஜினி அடித்துத் துவைச்சு காயப் போட்டதைப் பார்த்து ஹார்ட் அட்டாக் ஆகிப் போய் மேலே போய்ட்டாரு...
டாக்டருக்கு கொடு அனஸ்தீஸியாவை
டாக்டருக்கு கொடு அனஸ்தீஸியாவை
ரஜினிக்கு ஆபரேஷன். ஆனால் டாக்டருக்குத்தான் கொடுக்கனும் அனஸ்தீஸியாவை.
கஜினி கூட மறக்க மாட்டாரு
கஜினி எல்லாத்தையும் மறக்கலாம்... ஆனால் ரஜினியை மறக்க முடியாது.
பூகம்பம் எப்ப வரும் தெரியுமா
பூகம்பம் எப்ப வரும் தெரியுமா
ரஜினி தன்னோட மொபைல் போன வைப்ரேஷன் மோட்ல வச்சா பூமியில பூகம்பம் வரும்.
தலைவர் செஞ்ச பிராஜக்ட்தான் பிரமிடு
தலைவர் செஞ்ச பிராஜக்ட்தான் பிரமிடு
எகிப்தில் இருக்குதே முக்கோண வடிவில் பிரமிடு.. .அது வேறொன்னுமில்லை, தலைவர் சின்ன வயசுல ஸ்கூல்ல படிச்சப்போ செஞ்ச கிராப்ட் ஒர்க் பிராஜக்ட்தான்.
அன்னி்க்கு நர்ஸரி...இன்னிக்கு ஐஐடி
அன்னி்க்கு நர்ஸரி...இன்னிக்கு ஐஐடி
தலைவர் நர்ஸரி படிப்பை மட்டும் 7 ஸ்கூல்ல படிச்சாரு. இன்னிக்கு அந்த ஸ்கூல் எல்லாம் ஐஐடியா மாறிடிச்சு.
150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா..
150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா..
ரஜினிகாந்த் மட்டும் 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா, இங்கிலாந்துக்காரன் இன்னேரம் சுதந்திரத்திற்காகப் போராடிக்கிட்டிருந்திருப்பான்.
அன்னிலருந்து அதுதான் சண்டே
அன்னிலருந்து அதுதான் சண்டே
ரஜினி ஒரு நாள் முழுக்க பள்ளிக்கே போகவில்லை. அன்று முதல் அந்த நாளுக்குப் பெயர் வச்சாங்க - சண்டே என்று.
49ல் தலைவர் பிறந்தாரு... 47ல் வெள்ளைக்காரன் ஓடிட்டான்
49ல் தலைவர் பிறந்தாரு... 47ல் வெள்ளைக்காரன் ஓடிட்டான்
தலைவர் 1949ம் ஆண்டு பிறக்கப் போகிறார் என்பதை அறிந்து, 1947ம் ஆண்டிலேயே வெள்ளைக்காரன் நாட்டை வி்ட்டு ஓடிட்டான்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் கண்ணா...!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் கண்ணா...!
ரஜினியோட இமெயில் முகவரி ....gmail@rajinikanth.com
Story first published: Wednesday, December 12, 2012, 14:19 [IST]
English summary
Rajinikanth, who has won the hearts of the audience through his histrionics, seems to be dominating internet and mobile world. Indeed, the actor has become a butt of many light-hearted jokes, which even Rajini himself may enjoy reading. The superstar is one among the top searched actors on the search engines in the recent times. The jokes on the 60-year-old actor are spreading like wildfire on Twitter, Facebook, SMS etc. Here we bring you some of the popular jokes on the actor.