நல்ல விசயத்திற்கு நாலு பேர் வருவதை விட சங்கடமான சமயத்தில் உதவிக்கு வருபவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்று கூறுவார்கள். நடிகர் கமல் இதை உண்மையிலே உணர்ந்திருப்பார் போல அதனால்தான் தனக்கு இக்கட்டான நிலையில் துணை நின்ற அனைவருக்கும் உருகி உருகி நன்றி பாராட்டி வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் பட வெளியீட்டு பிரச்சினையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். 100 கோடி ரூபாய் இழந்துவிட்டேன். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று பேட்டியளித்தார்.
ரசிகர்களின் பாசம்
இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு பணத்தை மணியார்ட்டர் செய்திருக்கின்றனர். இன்னும் சிலம் சொத்துப்பத்திரம், டிடி போன்றவைகளையும் அனுப்பினார்களாம். இதைக்கண்டு நெகிழ்ந்து போன கமல் தனது ரசிகர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.
இளம் படைப்பாளிகள்
இதேபோல் திரையுலகினர் கமலுக்கு பக்கபலமாய் நின்றிருக்கின்றனர். குறிப்பாக இயக்குநர் சசிகுமார் தனிப்பட்ட முறையில் கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தைப் படித்து சிலிர்த்துப் போனாராம் கமல்.
கண்ணீரை வரவழைத்த பாசம்
இளைய தலைமுறை படைப்பாளிகளின் பாசம் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது என்று உருகினாராம் கமல்.
சேர்த்து வைத்த கமல்
கெட்ட விசயத்திலும் ஒரு நல்ல விசயம் என்பார்கள் அதேபோல விஸ்வரூபம் பிரச்சினையில் நடிகர் சிவகுமார் குடும்பமும், அமீர் குடும்பமும் ஒன்று சேர்ந்திருக்கின்றனராம். பருத்திவீரன் பிரச்சினையில் பல வருடங்களாக மோதிக்கொண்டிருந்த இருவரும் விஸ்வரூபம் பிரச்சினையில் ஒன்றாக இணைந்து பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
English summary
Many VIP stars of Tamil film industry have come forwarded to help Kamal Haasan. Moreover they have all united to suppot the legendary actor. Here is a round up.