Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காதலர் தின ஸ்பெஷல்: கமல்-ஸ்ரீதேவி, விஜய்-த்ரிஷா, அஜீத்-ஷாலினி- உங்களுக்கு பிடித்த ஜோடி எது?

Posted by:
Updated: Thursday, February 14, 2013, 13:42 [IST]

சென்னை: காதலர் தினமான இன்று கோலிவிட்டின் சிறந்த ஜோடிகள் யார் யார் என்பதை அலசிப் பார்ப்போம்.

உலக மக்கள் இன்று காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பூக்கள், பொம்மைகள், சாக்லேட்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே காதலை தெரிவித்தவர்கள் தங்கள் காதலன் அல்லது காதலியோடு இன்றைய நாளை செலவிடுவார்கள். காதலை தெரிவிக்காமல் கண்ணாலே பேசி வந்தவர்கள் இன்று தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில் கோலிவுட்டில் ரசிகர்களை கவர்ந்த ஜோடிகள் உள்ளனர். ரஜினி, கமலில் இருந்து துவங்குவோம். ரஜினி-ஸ்ரீதேவி, கமல்-ஸ்ரீதேவி, பிரபு-குஷ்பு, கார்த்திக்-ரேவதி, சுரேஷ்- நதியா, மோகன்- ராதா, சத்யராஜ்-சுகன்யா, சரத்குமார்-தேவயாணி, விஜய்-த்ரிஷா, அஜீத்-ஷாலினி, விக்ரம்-ஜோதிகா, சூர்யா- ஜோதிகா, கார்த்தி- தமன்னா, சிம்பு- த்ரிஷா, ஜெயம் ரவி-ஜெனிலியா, தனுஷ்- ஸ்ருதி ஹாசன், ஜீவா- கார்த்திகா ஆகிய ஜோடிகள் பெரிய திரையில் பார்க்க அம்சமாக இருந்தது. இதில் சூர்யா-ஜோதிகா, அஜீத்-ஷாலினி நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக உள்ளனர்.

ரஜினி மற்றும் ஸ்ரீதேவி

ரஜினிகாந்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்த அடுத்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். அதைப் பார்த்தவர்கள் இது தான் சிறந்த ஜோடி என்று சொல்லும்படி இருந்தது. ரஜினியும், ஸ்ரீதேவியும் சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர்.

கமல் மற்றும் ஸ்ரீதேவி

கமல்-ஸ்ரீதேவி ஜோடியை சிறந்த ஜோடி என்று கூறலாம். அந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பார்கள். 16 வயதினிலே படத்தில் தொடங்கி பல வெற்றிப் படம் கொடுத்த ஜோடி இது. அவர்கள் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை யாராலும் மறக்க முடியாது.

பிரபு- குஷ்பு

இளைய திலகம் பிரபு அமலா, லிஸி, ரேவதி, சுகன்யா என்று பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் அவருக்கு ஏற்ற ஜோடி என்றால் அது குஷ்பு தான். அவர்கள் ஜோடி சேர்ந்த படங்களில் சின்னத் தம்பியை மறக்கவே முடியாது.

கார்த்திக்- ரேவதி

லொட லொட என்று பேசும் கார்த்திக்கிற்கு ஏற்ற ஜோடி துரு துரு ரேவதி தான். இந்த ஜோடி பல ஹிட் படங்களில் நடித்துள்ளது.

சுரேஷ்- நதியா

சில ஆண்டுகளே நாயகியாக நடித்த நதியாவுக்கு ஏற்ற ஜோடி சுரேஷ்.

சத்யராஜ்- சுகன்யா

வளர்ந்த மனிதர் சத்யராஜ் ராதா, அம்பிகா, மீனா, ரஞ்சிதா, குஷ்பு என்று பல பேருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவரும் சுகன்யாவும் தான் பார்க்க பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் நின்றார்கள்.

சரத்குமார்- தேவயாணி

நாட்டாமை சரத்குமாருக்கு ஏற்ற ஜோடி தேவயாணி. அவருக்கு குஷ்பு, நக்மாவும் நல்ல ஜோடியாக இருந்தனர்.

விஜய்- த்ரிஷா

விஜய், த்ரிஷா ஜோடி பார்க்க நன்றாக இருக்கும். அவர்கள் சேர்ந்து நடித்த படங்களில் கில்லி, திருப்பாச்சி ஆகியவை ஹிட் படங்களாகும்.

அஜீத்- ஷாலினி

அஜீத்தும் ஷாலினியும் சேர்ந்து அமர்க்களம் என்ற ஒரே படத்தில் தான் நடித்தனர். திரையில் அஜீத்துக்கு ஏற்ற ஜோடியான ஷாலினி தான் தற்போது நிஜத்திலும் அவரது ஜோடி.

விக்ரம்- ஜோதிகா

சீயான் விக்ரம் யாருடன் நடித்தாலும் பொருத்தமாக இருந்தாலும் ஜோதிகா நல்ல ஜோடியாக இருந்தார்.

சூர்யா- ஜோதிகா

கணவன் மனைவியான சூர்யா-ஜோதிகா ஜோடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஜோடி. அவர்கள் நடித்த காக்க காக்க படம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

கார்த்தி- தமன்னா

கார்த்திக்கு ஏற்ற ஜோடி யார் என்று கேட்டால் அனைவரும் தமன்னாவைத் தான் சொல்வார்கள். ஆனால் என்னவோ இப்போதெல்லாம் அவர்கள் சேர்ந்து நடிப்பதில்லை.

சிம்பு- த்ரிஷா

வாலு சிம்புவுக்கு ஏற்ற ஜோடி யார் என்று அலசியதில் இறுதியாக கிடைத்தவர் த்ரிஷா. அவர்கள் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அவர்கள் ஜோடி பொருத்தம் பேசப்பட்டது.

தனுஷ்- ஸ்ருதி

தனுஷ் தமன்னா, நயன்தாரா என்று பல முன்னணி நடிகைகளுடன் நடித்திருக்கிறார். இருப்பினும் 3 படத்தில் வநத் தனுஷ்- ஸ்ருதி ஜோடி பேசப்பட்டது.

ஜெயம் ரவி- ஜெனிலியா

ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் பார்க்க அம்சமான ஜோடியாக இருப்பார்கள். அவர்கள் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்றும் நினைவில் நிற்கும் படம்.

ஜீவா- கார்த்திகா

ஜீவா நயன்தாரா, ஸ்ரேயா, டாப்ஸி, ஸ்ரீதேவி விஜயகுமார் என்று பல்வேறு நடிகைகளுடன் நடித்துள்ளார். இருந்தாலும் கோ படத்தில் நடித்த கார்த்திகா அவருக்கு பொருத்தமாக இருந்தார்.

Story first published:  Thursday, February 14, 2013, 13:33 [IST]
English summary
While the world is celebrating Valentine's day, we can see some jodi's that set onscreen on fire. Rajinikanth-Sridevi, Kamal-Sridevi, Vijay- Trisha, Ajith- Shalini are some of the pairs that attract the fans' attention.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.