Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்

Posted by:
Published: Thursday, May 17, 2012, 12:28 [IST]

Guru Peyarchi Jaya Tv Live Show

சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என எந்த கிரகங்கள் இடம் பெயர்ந்தால் ஜோசியர்கள் காட்டில் பணமழை பெய்யும். ஆனால் இந்த கிரகங்களின் பெயர்ச்சியை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வதால் அவர்களின் காட்டில் விளம்பரதாரர்கள் வாயிலாக பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

இன்று மாலையில் குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ( அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்க்கட்டுமே). இதை வைத்து பரிகாரம் பூஜை என்று ஜோசியர்கள் தங்கள் பங்குக்கு ஆரம்பித்து விடுவார்கள். குரு பெயர்ச்சியாகட்டும் அப்புறம் திருமண யோகம்தான் உங்க பெண்ணுக்கு என்று கூறி கல்லா கட்டுவார்கள்.

இப்பொழுது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். குருபகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து சாமிகும்பிட்டுவிட்டு இருந்த இடத்தில் இருந்தே தங்கள் வேலையை தொடங்கலாம். இதில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? வேறென்ன விளம்பர வருமானம்தான்.

ஜெயா ப்ளஸ் டிவியில் காலையில் நம்ம நேரம் நிகழ்ச்சியில் குரு பெயர்ச்சியை ஒட்டி ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரத்தை நேரலையில் கூறினார். பஞ்ச குரு ஸ்தலத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு பரிகாரம் வேறு அவர் கூறினார். அதாவது வலம்புரி சங்கு வைத்து வீட்டிலேயே பரிகாரம் செய்து கொள்ளலாமாம். எந்த பிரச்சினை என்றாலும் எங்களை கேளுங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அவர் கூறியதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

ஜெயா டிவியில் இன்று மாலை குருப்பெயர்ச்சியை ஒட்டி தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரடியாக செல்ல முடியாதவர்கள் குரு பகவானை பார்த்து பக்தியுடன் வணங்கிக்கொள்ளலாம்.

குருப்பெயர்ச்சியை வைத்து இன்னும் என்னென்ன காமெடி நடக்கப்போகிறதோ தெரியவில்லை.

சரி அது கிடக்கட்டும் உங்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கு?

English summary
Today evening Guru peyarchi. Jaya TV will telecast live show program at Guru temple.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL