Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காதம்பரியில் இரட்டை வேடத்தில் கலக்கும் மிதுனா

Posted by:
Published: Wednesday, May 16, 2012, 15:05 [IST]

Jaya Tv S Serial Kadambari Heroine Mithna

கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா சின்னத்திரையில் காதம்பரி என்ற நெடுந்தொடரில் அறிமுகமாகியுள்ளார். இதில் அவருக்கு இரட்டை வேடம் முன் ஜென்மம், மறு ஜென்மம் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறாராம் மிதுனா.

நடிகை மிதுனா மாமதுரை' படத்தில் அறிமுகமானவர். தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் குறித்து மிதுனாவிடம் பேச்சுக்கொடுத்ததில் அவருடைய கதாபாத்திரம் பற்றி கிலாகித்து கூறினார்.

காதம்பரி தொடர் முன்ஜென்மத்தையும், மறு ஜென்மத்தையும் இணைக்கும் தொடர். 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம் கொஞ்சம் மிரட்டலாகத்தான் இருக்கிறது.

முன் ஜென்ம வேடத்திற்காக ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவமாக இருக்கிறதாம் மிதுனாவிற்கு. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதில் காதம்பரிக்கு எதிராக மிரட்டலான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடித்திருக்கிறார் என்றார் மிதுனா. இவருடன் லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்துள்ளனர்.

English summary
Jaya TV telecasting thrill serial Kadambari. Actress Mithuna is the heroine of the serial.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter