Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பெண்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ராகவி!

Posted by:
Published: Thursday, June 21, 2012, 9:39 [IST]

Tirumathi Selvam Villi Jeyanthi

கண்களை உருட்டி உருட்டி வில்லத்தனம் செய்யும் அண்ணியாக திருமதி செல்வம் நெடுந்தொடரில் கலக்கி வருகிறார் நடிகை ராகவி. இவரது வில்லத்தனம் பெரும்பாலான பெண்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது. அண்ணி என்றாலே அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சைலண்ட் வில்லியாக நடித்து வரும் ராகவி தனது சீரியல் வாழ்க்கையை பற்றி சொல்கிறார் படியுங்கள்.

சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். "ராஜா கைய வைச்சா', "மருதுபாண்டி', "நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன. பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது.

ஏவி.எம். நிறுவனத்தின் "சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன். சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.

சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.

சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். "ஜெயம்', "பிருந்தாவனம்', "பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். இதில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும்.

நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை. ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.

இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்று சொல்லி சிரிக்கிறார் ராகவி.

English summary
Actress Raghavi is a familar face now, thanks to Thirumathi Selvam TV serial. She is doing a negative role and getting good response from the viewers. She has opened her mind here.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter