ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் அலுக்காது. புதியது போலவே இருக்கும். தூர்தர்சனின் வருகைக்குப் பின்னர் அவற்றை காட்சி வடிவமாக பார்க்க நேர்ந்தது. இந்தி பேசினாலும் அதன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் மக்கள் புரிந்து கொண்டனர்.
ராமாயண, மகாபாரத இதிகாசத் தொடர்கள் பின்னர் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. 52 வாரங்களும் மக்கள் அலுக்காமல் பார்த்தனர். அதே தொடர் இப்போது தமிழில் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.
குற்றாலமலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் தயாராகிவரும் இந்த தொடர் வரும் ஞாயிறு காலை 10 மணிமுதல் ஒளிபரப்பாகிறது. 700 கலைஞர்கள், பிரம்மாண்டமான செட்கள், சினிமா பிரபலங்களின் இயக்கம், இசை என தயாராகிவரும் மகாபாரதம் தொடர்பற்றி ஒரு சிறப்பு பார்வை.


































