twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

    By Mayura Akilan
    |

    அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோ கிரீன் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீ சங்கரா டிவி ஒளிபரப்புகிறது.

    கோ கிரீன்'' என்ற தலைப்பு நமக்கு இரண்டு விஷயங்களைப்பற்றி கூறுகின்றது. அதாவது, ''கோ'' என்றால் பசு மற்றும் ''கிரீன்'' என்றால் ''பச்சை'', அதாவது ''சைவ உணவு முறை.''

    A show for Vegetarianism on Sri Sankara TV

    சைவ உணவு முறையை ஆங்கிலத்தில் ''வெஜிடேரியனிசம்'' என்பர். லத்தின் மொழியின் ''வெஜிடஸ்'' என்ற வார்த்தையிலிருந்து நிறுவப்பட்ட ''வெஜிடேரியனிசம்'' என்பதன் பொருள். நாம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சைவ உணவு முறையை பின்பற்றி வாழ்வதே மனித குலத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

    பண்டைய காலத்து இந்தியர்களின் உணவு முறை அகிம்சையை பின்பற்றி உருவாக்கப்பட்டது. அவர்கள் மற்ற விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது மட்டுமல்லாமல், பசுவை காப்பதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். மனித நேயம், மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், ஆன்மிகம் என பல துறைகளுடன் ''கோ சம்ரஷணம்'' சம்பந்தப்பட்டுள்ளது.

    பண்டைய காலத்து சைவ உணவு முறை மற்றும் கோ சம்ரஷணம் அதாவது பசுவை பாதுகாத்தல் என்கின்ற இவ்விரண்டு விஷயங்களையும் நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும்.

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, ''கோ கிரீன்.''

    English summary
    The title of the program 'Gho Green' represents dual concept, the term refers to 'cow' and the term 'Green' meaning vegetarianism. The word 'Vegetarianism' is derived from the Latin word 'vegetus' which means 'lively or 'vigorous'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X