twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீ தமிழில் காயத்ரி… ஏழைப்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!

    By Mayura Akilan
    |

    திங்கள் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'காயத்ரி' எனும் புத்தம் புதிய தொடர் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

    உயர்ந்த லட்சியங்களும், நல்ல எண்ணங்களும், போராட்ட குணமும் உள்ள ஒரு ஏழைப் பெண்ணின் கதை இது.இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

    அவளுக்கு அவமானங்கள் ஏற்படும்போதெல்லாம் 'நான் ஏழையாகப் பிறந்தது என் குற்றமல்ல... ஆனால் ஏழையாகவே இறந்து போனால் அது என் குற்றம்...' எனும் மந்திரத்தை உச்சரிப்பவள்.

    காயத்ரியின் வாழ்க்கை

    காயத்ரியின் வாழ்க்கை

    சமூக அங்கீகாரம் இல்லாத ஒரு இட்லிக்கடைத் தாய்க்குப் பிறந்தவள் காயத்ரி. சூழ்நிலையினாலும், வறுமையினாலும் தான் விரும்பிய பெண்ணை விட்டுவிட்டு, குடும்ப நிர்ப்பந்தத்தினால் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் காயத்ரியின் தந்தை.

    தாய்க்கு அங்கீகாரம்

    தாய்க்கு அங்கீகாரம்

    அந்தப் பணக் காரப் பெண் மிகவும் திமிர் பிடித்தவள். கொலை செய்வதற்குக்கூட அஞ்சாதவள். ஆனால், காயத்ரி அவளது தந்தை மூலம் தாயின் கழுத்தில் ஒரு தாலியைக் கட்ட வைத்து அம்மாவிற்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஆசைப்படுகிறாள்.

    சித்தியின் சூழ்ச்சி

    சித்தியின் சூழ்ச்சி

    காயத்ரியின் விருப்பம் நிறைவேறியதா? இதை அறிந்த அந்த பணக்காரத் திமிர் பிடித்த சித்தி அதிபயங்கர சூழ்ச்சிகளை உருவாக்குகிறாள்.

    காயத்ரியின் வெற்றி

    காயத்ரியின் வெற்றி

    அந்த சூழ்ச்சியில் காயத்ரி வீழ்ந்தாளா...? வென்றாளா...? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்களுடன் காட்சிப்படுத்துகிறது தொடர்.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஏ.பி.ராஜேந்திரன் இயக்குகிறார்.

    English summary
    Gayathri is an 18 year old girl who wants identity for her mother in society as a wife. She strives hard for it and even takes up the blame for a murder, she has not committed. She goes to jail and even loses her mother in the bargain. Tune into Gayathri on Zee Tamizh from Jan 20th,2014 - Monday to Friday at 10pm
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X