twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிடியும்... சிசிஎல் மேட்சும்...

    By Mayura Akilan
    |

    ஞாயிறன்று விஜய் டிவியில் சிசிஎல் மேட்ச் பார்க்க நேரிட்டது. சன், கலைஞர் என பிற தமிழ் சேனல்களில் சினிமா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க விஜய் டிவி மட்டும் நடிகர்கள் பங்கேற்று ஆடிய சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்துக் கொண்டது.

    சென்னை ரைனோஸ் அணியும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் பெங்களூர் சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் மோதின.

    போட்டி தொடங்குவதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினி திவ்யதர்சினி சிசிஎல் பார்க்க வந்திருப்பதைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பேசினார்.

    திரிஷா, வரலட்சுமி

    திரிஷா, வரலட்சுமி

    சென்னை ரைனோஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடர் த்ரிஷா, மற்றும் போட்டியைக் காணவந்திருந்த நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜயலட்சுமி, அழைத்து கிரிக்கெட் தவிர மற்ற அனைத்து விசயங்களையும் பேசினார்.

    சென்னை டூ பெங்களூர்

    சென்னை டூ பெங்களூர்

    சென்னையில் நடைபெறுவதாக இருந்த இந்த போட்டி சில காரணங்களினால் பெங்களூக்கு மாற்றப்பட்டது. சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று ஆடிய கிரிக்கெட் போட்டிதான் என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது.

    திரிஷாவும் கமலும்

    திரிஷாவும் கமலும்

    சென்னை ரைனோஸ் தூதுவர் திரிஷா, தன்னுடைய அணியைப் பற்றி பேசினார். அவரிடம் பேட்டி எடுத்த டிடியோ, கமலுக்கு பத்மபூசன் விருது கிடைத்தது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொன்ன திரிஷா, உலகநாயகன் கமலுக்கு எப்போதோ இந்த விருது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் லேட்டாக கொடுத்திருக்கின்றனர், ஆனாலும் பரவாயில்லை என்றார்.

    சிரிக்காத வரலட்சுமி

    சிரிக்காத வரலட்சுமி

    சிசிஎல் போட்டியின் போது வரலட்சுமி சரத்குமாரும், திரிஷாவும் அருகருகே அமர்ந்துதான் போட்டியை ரசித்தனர். ஆனால் ஒருமுறை கூட இருவரும் நேருக்கு நேர் பார்த்து சிரித்து கொண்டதாகவோ, உற்சாகத்தை பகிர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை.

    நடிகர் பாண்டுவின் மாத்திரை

    நடிகர் பாண்டுவின் மாத்திரை

    சிசிஎல் போட்டியைக் காண நடிகர் பாண்டு எமதர்மன் வேஷத்தில் வந்திருந்தார். போதை, பான், குட்கா, சிகரெட் போன்றவைகளை சாப்பிட்டு இன்றைய இளம் தலைமுறையினர் விரைவில் மேலோகம் போவதை தடுக்க புதிய வகை சுயூங்கம் வடிவிலான மாத்திரை ஒன்றினை கொடுத்தார்.

    டிடி வாங்கிய மாத்திரை

    டிடி வாங்கிய மாத்திரை

    பாண்டுவிடம் இருந்து தொகுப்பாளினி டிடியும் மாத்திரையை வாங்கினார். தனது நண்பர்களுக்கு அது உபயோகமாக இருக்கும் என்று கூறினார்.

    விக்ராந்த் – விஷ்ணு அசத்தல்

    விக்ராந்த் – விஷ்ணு அசத்தல்

    சென்னை அணியில் விக்ராந்த், விஷ்ணுவும் அசத்தலாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார்கள். 20 ஓவரில் 193 ரன்கள் எடுத்தனர் சென்னை அணியினர்.

    கிச்சா சுதீப்

    கிச்சா சுதீப்

    கர்நாடகா அணிக்கு 194 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதும், அசராமல் ஆடியது கர்நாடக அணி. பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் போதும் அணியின் கேப்டன் கிச்சா சுதீப் பறக்கும் முத்தத்தை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

    டை ஆன மேட்ச்

    டை ஆன மேட்ச்

    சென்னை அணிக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல கர்நாடக அணி என்பதை நிரூபித்து அவர்களும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தனர். மொத்தத்தில் நடிகர்கள் பங்கேற்ற சிசிஎல் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது.

    English summary
    The Koffee with DD, host was seen having fun with the celebrity heroines Trisha, Sanchitha Shetty, Vijayalakshmi and Varalashmi Sarathkumar. The two time champions, Chennai Rhinos took on defending Champion Karnataka Bulldozers and the match ended in a tie with both teams scoring 193 in the alloted 20 overs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X