twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு காமெடிதான் ரொம்பப் பிடிக்கும்: தேவதர்ஷினி

    By Mayura Akilan
    |

    ஞாயிறு காலை வந்தாலே தேவதர்சிஷினி செய்யும் கலாட்டாவைக் காண சன் டிவியை ஆன் செய்கின்றனர் ரசிகர்கள். மதுரை முத்துவும், தேவதர்ஷினியும் செய்யும் காமெடி கலாட்டதான் இன்றைக்கு பிரபலம்.

    எல்லோரும் அழுது வடியும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் நகைச்சுவையை தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேட்டால் சிரிக்கிறார்.

    தனக்கு சோகமாக நடிப்பது சரிப்பட்டு வராது என்று கூறியுள்ள அவர், தான் சீரியலில் நடிக்க வந்ததே எதிர்பாரத நிகழ்வுதான் என்கிறார்.

    மர்மதேசத்தில் அறிமுகம்

    மர்மதேசத்தில் அறிமுகம்

    எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொலைக்காட்சிகளில் பணியாற்றிய தேவர்ஷினியை, நாகா இயக்கத்தில் உருவான "மர்ம தேசம்' தொடர்தான் டிவி ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது.

    இன்றைக்கும் வரவேற்பு

    இன்றைக்கும் வரவேற்பு

    இன்றுகூட பொது இடங்களில் தேவதர்ஷினியை சந்திக்கும் பலரும் "மர்மதேசம்' தொடர் குறித்து பேசாமல் இருக்க மாட்டார்களாம். பொது இடங்களில் "மர்மதேசம்' குறித்து பேசுவதைக் கண்டு, அதைப் பார்க்க அவரது மகள் ஆசைப்பட்டிருக்கிறாள். கோடை விடுமுறையில் தினமும் மூன்று எபிசோட் வீதம் மொத்தம் 84 எபிசோடையும் பார்த்து முடித்துவிட்டாளாம்.

    வெள்ளைக்குதிரை பரிசு

    வெள்ளைக்குதிரை பரிசு

    சீரியலைப் பார்த்த அவரது மகள், ஒருநாள் வெள்ளைக் குதிரை வாங்கிவந்து "இதுதான் மர்ம தேசம்' வெள்ளைக் குதிரை என்று சொல்லி அவரது தந்தையும் மர்மதேசம் நாயகனுமான சேத்தனுக்குப் பரிசளித்திருக்கிறாள்.

    காதல் திருமணம்

    காதல் திருமணம்

    சீரியலில் நடிக்கும்போது பலமுறை பார்த்திருந்தாலும் சேத்தனுடன் பேசியதில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைத்ததில்லை. "மர்மதேசம்' தொடரில் இருவரும் இணைந்து நடித்தபோதுதான் பழகவே ஆரம்பித்தோம். பொள்ளாச்சியில் ஒரு மாதம் தங்கியிருந்தபோதுதான் நாங்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்

    சினிமாவில் வாய்ப்பு

    சினிமாவில் வாய்ப்பு

    முதன்முதலாக "எனக்கு 20 உனக்கு 18' படத்தில் நடித்தேன். ஆனால், அடுத்து விவேக் ஜோடியாக நடித்த "பார்த்திபன் கனவு' படத்தில் நான் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ஹிட்டாகவே தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.

    நகைச்சுவை வேடங்கள்

    நகைச்சுவை வேடங்கள்

    முதன்முதலாக நகைச்சுவை வேடத்தில் நான் நடித்த "ரமணி வெர்சஸ் ரமணி' எவ்வாறு எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததோ, அதுபோலவே "பார்த்திபன் கனவு' படமும் அமைந்து, தொடர்ந்து நகைச்சுவை வேடங்களாகவே வர ஆரம்பித்தன.

    சோகம் சரிப்பட்டு வராது.

    சோகம் சரிப்பட்டு வராது.

    சினிமாவில் நகைச்சுவை வேடங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் சோகம் ததும்பும் பாத்திரங்களிலும் நடித்தால் சரிவராது என்றுதான் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். சன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டாவில் மட்டும் இப்போது நடித்து வருகிறேன் என்கிறார் தேவதர்ஷினி.

    English summary
    Devadarshini began her career as a television anchor. Her first TV serial was Marmadesam. Later she acted in number of serial like Annamalai, Kolangal, Chinna Pappa Periya Pappa, Athi Pookkal. Currently she is doing a comedy show, Sunday Galatta which airs on Sun TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X