twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாயமான மலேசிய விமானம்: டிஸ்கவரி சேனலில் புதிய நிகழ்ச்சி

    By Mayura Akilan
    |

    சென்னை: மலேசியா பயணிகள் விமானம் மாயமான நிகழ்வு உலக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பற்றிய பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன.

    மாயமான விமானத்தை தேடும் வேட்டை இன்னும் நிற்கவில்லை. இதன் உண்மை நிலையை ஆராய வருகிறது 'ப்ளைட் 370 தி மிஸ்ஸிங் லிங்க்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சி. ஏப்ரல் 21-ம் தேதி முதல் திங்கட்கிழமைகளில் இரவு 9மணிக்கு டிஸ்கவரி டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது.

    pecial documentary on Flight 370

    விமான பாதுகாப்பு

    விமான பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, விமானத்திலுள்ள தகவல் தொடர்பு கருவிகள், எந்திரக் கோளாறு, ராடார் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு, ஆகியவற்றை தெரிவிக்கிறது.

    கருப்புப் பெட்டி

    சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கருப்புப் பெட்டி போன்ற பல விஷயங்களை விமானப் போக்குவரத்து துறையின் நிபுணர்கள் வாயிலாக விரிவாக அலச உள்ளது.

    மலேசியா விமானம்

    விபி-370 விமானம் திடீரென எப்படி மாயமாய் மறைந்திருக்க முடியும்? என்பதைப் பற்றிய பல்வேறு சாத்தியக்கூறுகளையும், நவீன சர்வதேச பயணத்தில் இருக்கும் உள்ளார்ந்த பிரச்சினைகளையும் இந்த சிறப்பு நிகழ்ச்சி அலசுகிறது.

    தொழில்நுட்பங்கள்

    இவை மட்டுமின்றி விமான பயணிகள் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள், எதிர்காலத்தில் விமானப் பயணிகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டு வரும் தொழில்நுட்பங்கள் பற்றியும் இந்த சிறப்பு நிகழ்ச்சி விளக்குகிறது.

    English summary
    Channel presents a special one-hour documentary, Flight 370: The Missing Links, which gathers the foremost thinkers in aviationand securityto explore key questions surrounding the disappearance of Malaysia Airlines flightMH370. The programme will premiere on Monday, 21st April at 9 pm only on Discovery Channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X