twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுயுகம் டிவியின் நம்ம ஊரு நம்ம ருசி

    By Mayura Akilan
    |

    நமது புதுயுகம் தொலைக்காட்சியின் ஒரு புதுமையான முயற்சி 'நம்ம ஊரு நம்ம ருசி.

    'கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு' நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியை நேயர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த 'நம்ம ஊரு நம்ம ருசி.

    சமையல் நிகழ்ச்சி என்றாலே பெண்களிடம் தனி வரவேற்பை பெறும்.

    நேயர்கள் பங்கேற்பு

    நேயர்கள் பங்கேற்பு

    நம்ம ஊரு நம்ம ருசி நிகழ்ச்சி தமிழகத்தின் எட்டு நகரங்களில் நடைபெற்றது. வட்டாரம் சார்ந்த உணவு வகைகளை நேயர்களை வைத்தே சமைக்கச் செய்து அவர்களில் சிறந்தவர்களை தமிழகத்தின் சமையல் சக்ரவர்த்தியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

    சமையல் சக்கரவர்த்தி

    சமையல் சக்கரவர்த்தி

    தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை, அந்தந்த ஊரின் கைப்பக்குவத்தோடு சமைக்கும் 'சமையல் சக்ரவர்த்தி' யார் என்பதை கண்டறிய இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை டூ கோவை

    நெல்லை டூ கோவை

    ஆரம்ப சுற்றுகள் திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், தஞ்சாவூர், மதுரை, சேலம், கோவை, ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

    பெண் சக்கரவர்த்திகள்

    பெண் சக்கரவர்த்திகள்

    ஒவ்வொரு ஊர்களிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

    குழிப்பணியாரம்… ஸ்வீட் போளி

    குழிப்பணியாரம்… ஸ்வீட் போளி

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்மணிகள் குழிப்பணியாரம், ஸ்வீட் போளி, தேங்காய் குழாய் புட்டு, கார அடை, அவியல் என சமைத்து அசத்தினர்.

    சென்னையில் இறுதிப்போட்டி

    சென்னையில் இறுதிப்போட்டி

    ஒவ்வொரு ஊர்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சென்னையில் நடக்கும் இறுதிப்போட்டியில் மோத இருக்கிறார்கள்.

    ரசித்து ருசிங்க

    ரசித்து ருசிங்க

    'நம்ம ஊரு நம்ம ருசி' நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தோறும் மதியம் 1.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. ரசித்து ருசிங்க என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

    English summary
    A golden opportunity to showcase the traditional recipe of your native to the world and your expertise as a chef. Exhibit your cooking talents and win the title " Samayal Chakravarthy" ( King of Cooking) on Pudhu Yugam TV telecast week end days at 1PM.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X