twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை படப்பிடிப்புக்கு பாதுகாப்பு: கமிஷனரிடம் மனு கொடுத்த ராதிகா

    By Mayura Akilan
    |

    சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

    சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பாதுகாப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜை சந்தித்து, தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராதிகா சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் சிலர் புகார் மனு ஒன்றை மாலையில் கொடுத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியதாவது:

    படப்பிடிப்பு பாதிப்பு

    படப்பிடிப்பு பாதிப்பு

    டி.வி. சீரியல்கள் படப்பிடிப்பு என்பது தினமும் நடைபெறவேண்டும். ஒருநாள் படப்பிடிப்பு நடைபெறாமல் போனாலும், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எங்களால் சீரியல் கேசட்டுக்களை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

    இந்த நிலையில், கேமராமேன் சங்கங்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்கள் டி.வி. சீரியல் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்

    வேலை செய்ய மறுப்பு

    வேலை செய்ய மறுப்பு

    இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நாங்கள், பெப்சி அமைப்பின் அங்கமாக உள்ள கேமராமேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாராக உள்ளோம்.

    அதேநேரம், அவர்கள் வேலைசெய்ய மறுக்கும்போது, வெளிநபர்களை வைத்து படப்படிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    பாதுகாப்பு தேவை

    பாதுகாப்பு தேவை

    இப்படி வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினால், கேமராமேன் சங்கத்தின் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே என்னுடைய அலுவலகத்துக்குள் நுழைந்து இதுபோன்ற தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    இதனால், நாங்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.

    அதற்கு கமிஷனர், வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு இடங்களின் விவரங்களை பட்டியலிட்டு தரவேண்டும் என்றும் அந்த இடங்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்‘ என்று கூறினார். அவரிடம் படப்பிடிப்பு இடங்கள் குறித்த விபரங்களை கொடுத்துள்ளோம்.

    சம்பள உயர்வு

    சம்பள உயர்வு

    சின்னத்திரை தயாரிப்பாளர்களை பொறுத்தவரை, கேமராமேன்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்கியுள்ளோம்.

    கேமராமேன் மட்டுமல்லாமல், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்து, நல்ல மரியாதையுடன் சமுதாயத்தில் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்துள்ளோம்.

    படப்பிடிப்பு நடக்கும்

    படப்பிடிப்பு நடக்கும்

    அதேநேரம், இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், புதிதாக ஒரு கேமராமேன் தொழில் சங்கத்தை தொடங்க எங்களுக்கு யோசனை எதுவும் இல்லை.

    கேமராமேன் சங்கத்தின் உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள் வராதபட்சத்தில்தான் வெளி ஆட்களை கொண்டு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறினார்.

    English summary
    Actress Radhika has sought protection to her shootings
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X