twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சான்ட்ரா நடிக்கும் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா?

    By Mayura Akilan
    |

    புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா காமெடி தொடர் ரசிகர்களிடையே வரவேற்பினை அதிகரித்துள்ளதாம்.

    இன்றைய பரபரப்பான நகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் வேலை செய்யும் இடத்திலும், வீட்டிலும் உறவுகளை உருவாக்கவும் வளர்க்கவும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லும் புதுமையான கலகலப்பு தொடர் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா?.

    இந்த தொடரில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிகை சான்ட்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சினிமா கதாநாயகி

    சினிமா கதாநாயகி

    அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சான்ட்ரா நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரஜீனை திருமணம் செய்து கொண்டார். போராளி, தரணி, சிவப்பு எனக்குப் பிடிக்கும் போன்ற திரைப்படங்களில் நடிக்கப் போனதால் சின்னத்திரையை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தார்.

    காமெடி சீரியல்

    காமெடி சீரியல்

    இப்போது புதுயுகம் டிவியில் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    மினி தொடர்

    மினி தொடர்

    கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா தொடர் வெறும் 100 எபிசோடுகளை மட்டுமே கொண்ட மினி தொடர் என்பதால் இதில் நடிக்க ஒத்துக் கொண்டதாக கூறுகிறார் சான்ட்ரா.

    காமெடி காதல்

    காமெடி காதல்

    பத்திரிக்கையாளராக நடிக்கும் சான்ட்ரா, காதல் பற்றி தொடர் எழுதப்போய் காதலில் விழுகிறாராம். அழகான காமெடி தொடர் என்பதால் ஒத்துக் கொண்டதாக கூறுகிறார்.

    லட்சியம் வெள்ளித்திரைதான்

    லட்சியம் வெள்ளித்திரைதான்

    தன்னுடைய முதல் லட்சியம் வெள்ளித்திரைதான் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறார் சான்ட்ரா.

    English summary
    Krishna Laddu Thinna Asaiya is a comedy serial on Pudhu Yugam TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X