twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் விஜய்யின் தலைவா- பொங்கல் ஸ்பெஷல்

    By Shankar
    |

    சென்னை: இந்த பொங்கலுக்கு சன் டிவியில் விஜய் நடித்து, பெரும் சர்ச்சைக்குள்ளான தலைவா படம் ஒளிபரப்பப்படுகிறது.

    விஜய் - அமலா பால் நடிப்பில், ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தலைவா. இந்தப் படம் பல காரணங்களால் அறிவித்த தேதியில் வெளியாகவில்லை, தமிழகத்தில். ஆனால் மற்ற பகுதிகளில் வெளியாகிவிட்டது.

    படத்திலிருந்து சில காட்சிகள், டைம் டு லீட் வாசகம் போன்றவை நீக்கப்பட்ட பிறகே வெளியிட முடிந்தது. ஆனால் ஏன் படம் வெளியாகவில்லை என்பதை மட்டும் கடைசி வரை சொல்ல மறுத்து மவுனம் காத்து வருகிறார் விஜய்.

    அந்தப் படம் வெளியாகு தோல்வியைத் தழுவியது. மோசமான விமர்சனங்களையும் சந்தித்தது.

    இந்த நிலையில் அந்தப் படத்தை வரும் பொங்கல் தின ஸ்பெஷலாக சன் டிவி ஒளிபரப்புகிறது.

    விஜய் போன்ற பெரிய நடிகரின் படம் வெளியான மிகக் குறுகிய காலத்தில் சின்னத்திரைக்கு வருவது இதுவே முதல்முறை.

    English summary
    Vijay's recently released Thalaivaa movie will telecast on Pongal Day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X