Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தமிழகத்தில் இன்று

Published: Tuesday, May 23, 2000, 5:30 [IST]

ரா-ணு-வக் கட்-டுப்-பாட்-டில் மக்கள் நெ-ருக்-க-மு-டை-ய யாழ். பகுதிகள்: சந்திரிகா

டெல்லி:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில்பல பகுதிகளை பிடித்துவிட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன. புலிகளின் தாக்குதலை எதிர்த்து ராணுவத்தினர் தீவிரமாகபோரிட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.

சாவகச்சேரியை புலிகள் கைப்பற்றியுள்ளது உண்மைதான். அங்கு அவர்கள் மிகவும் பலத்துடன் உள்ளனர். பல பகுதிகளில் இருந்து புலிகள்விரட்டப்பட்டுள்ளனர்.

பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலைதூக்க விரும்பவில்லை. ஆனால், மற்ற நாட்டில் நடைபெறும் பயங்கரவாதமற்றும் தீவிரவாத செயல்களைக் கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பது என்பது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும்ஊக்குவிப்பது போல் உள்ளது.

புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டையை நிறுத்த நார்வே கடுமையாக முயற்சித்து வருகிறது. இன்றைய நிலையில், எந்தபயங்கர தாக்குதலையும் சந்திக்க தயாராக உள்ளேன். என்னுடைய தந்தை, கணவர் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். என் மீதும் பல வகையானதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான் அரசியலில் இருப்பதை எனது குழந்தைகள் விரும்பவில்லை. வெறுக்கின்றனர். ஏனெனில் அரசியல் வன்முறையால்தான் அவர்கள் தங்களதுதந்தையை இழந்தனர். குழந்தை இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகும் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.

யு.என்.ஐ.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.