For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

1969-ம் வருடம், காந்திஜியின் நூறாவது பிறந்த நாள் நாடெங்கும் பெரிய விழாவாககொண்டாடப்பட்டது. ஓவியன் என்கிற அளவில் நானும் ஏதாவது செய்ய வேண்டும்.இந்த மகிழ்ச்சியில் நானும் பங்கு பெற வேண்டும் என்று நினைத்தேன்.

Art Picture 4காந்திஜி பற்றி என்னுள் ஏற்பட்டிருந்த உயர்ந்த மதிப்பீடுகள், சாதாரண மக்களிடம் கூடதெய்வத்திற்கு இணையாக அவர் பெற்றிருந்த உயர்வான இடமும், பிறகு அடுத்த சிலமாதங்கள் குண்டுக்கு இலக்காகி மரணமுற்ற செய்தியறிந்து மக்கள் அடைந்த துயரம்-இதெல்லாம் என்னுள் பசுமையாக நின்ற நினைவுகள்.பிறகு அவரது வசீகரமான முகம்.எந்த ஒரு கோணத்திலும் கலைஞன் ஒருவனை ஓவியம் தீட்ட அல்லது சிற்பமாகவடிக்க உசுப்பிவிடும் உட்லவாகு. ஒரு கோணத்தில் புத்தரையும், மற்றொருகோணத்தில் இயேசுவையும் நினைவுக்கு கொண்டுவரும் அளவுக்கு மனித உருவில்இறைவனை தரிசிக்கிற அனுபவம் இதெல்லாம்தான் காந்திஜியை நான் நூற்றுக்கும்மேற்பட்ட கோட்டுச் சித்திரங்களாக வரைய என்னைத் தூண்டியது.

எந்த இடத்திலும், வித்தியாசம் என்று, சிரித்து விடும்படியாக . கார்ட்டூன் மாதிரியோஇருந்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாகவே இருந்தேன். இந்த ஓவியங்கள்எனக்கு ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

மாடர்ன் ஆர்ட் - பலருக்கு இது ஒரு புதிராகவே இருக்கிறது. ஒரே படத்தை பலர் பார்க்கபலவிதமான தோற்றத்தை, காட்சியை பார்ப்பவர்களாகவே யூகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. மாடர்ன் ஆர்ட்டும் தீட்டப்படவதற்கு முன்பு, ஓவியர் இந்த படம்தான் வரையப் போகிறோம்.இதுதான் மக்களுக்கு தெரிய வேண்டும் - என்கிறமுடிவில்தான் வரையப்படுகிறதா?

மாடர்ன் ஆர்ட் என்பதை நவீன ஓவியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப்படம் வரையப் போகிறோம் இந்த கோடு இந்த மலை, ஆறு, பூ - இப்படித்தான்வரையப்பட வேண்டும் என்கிற வரைமுறை ஏதும் தேவையே இல்லை. இந்த நிலைமாற்றம்தான் மாடர்ன் ஆர்ட் என்பது. புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றுரிலாக்ஸ்டாக ஓவியனுக்கென்று கட்டுப்பாடு இல்லாமல் அதே நேரத்தில் ஒருகுறிக்கோளோடு வரைவது. அப்படிவரையும் போது ஓலியனுக்கே புதிதுபுதிதாகஏதாவது தோன்றும். அதை அப்படியே வைத்து மேலும் மேலும் வரைவது.முழுபடமும் வரைந்து போதும் என்று தூரிகையை கீழே வைத்து படத்தைப் பார்த்தால்..அந்த ஓவியனே வியக்கும் அளவிற்கு அதில் புதிதாக ஒரு காட்சி இருக்கலாம்.மாடர்ன் ஆர்ட் ஆரோக்கியமான விஷயம்தான்.

Art Picture 5காந்தி படங்களைப் பொலவே, ஆதிமூலம் வரைந்த ராஜாக்கள் படங்களும் மிகவும்பேசப்பட்டது. நகைகைள், கிரீடம், ஆயுதம், பெரிய மீசை என்று ராஜாவுக்குதீட்டப்பட்ட அந்த படத்தில் ராஜாவின் முகம் மட்டும் காணாமல் இருந்தது.

இது பற்றி ஆதிமூலமே சொல்கிறார்: ஆங்கிலேயர் இங்கு வந்த போது அவர்களுடன்ஒத்துழைத்த ராஜாக்கள் பற்றிய ஓவியங்களையும், புகைப்படங்களையும் பார்க்கநேரிட்டது. படத்தில் ராஜாக்கள் பற்றிய ஓவியங்களையும் புகைப்படங்களையம்பார்க்க நேரிட்டது. படத்தில் ராஜாக்கள் என்றும் அணியாத நகைகளுடனும்,ஆயுதங்களுடணும் காமிராமுன் நின்றிருந்தார்கள். அதில் ஒரு பொய்த்தன்மைஇருந்தது. ராஜாக்கள் வெற்று உடைகளாய், ஜடங்களாய்த் தெரிந்தார்கள். அந்தப்புகைப்படத்தில் ராஜாக்கள் இல்லை. வெறும் உடமபுகளும், உடைகளுமே இருந்தன.இதைத்தான் நகை. ஆயுதம் இவைகளை பெரிதாக வரைந்து, அவர்களது முகத்தைமட்டும் காணாமல் செய்தேன் என்றார் ஆதிமூலம்.

பெண்களை நிர்வாணமாக படம் வரைவது பல நேரங்களில் சர்ச்சையைக்கிளப்பியிருக்கிறது. இருந்தும் ஆபாசம் தானே?

யார் சொன்னது? அழகு ஆபாசம் என்பது அவரவர்களுடைய பார்வையைப்பொறுத்தது. அவரவருடைய நிர்வாணம் அவரவருக்குத் தெரியும். இதில் பெரியதாகமற்ைக்க ஏதுமில்லை. கோயில்களில் சிலைகளில் இல்லாத நிர்வாணமா? கோயில்சிலைகள் ஆபாசமாக கண்ணில்படுமா? இந்த நிலையில் ப்ெண் நிர்வாணப்படம்என்பது தவறில்லை. அயல் நாடுகளில் பெண் நிர்வாணப்படங்கள் மட்டுமில்லை,ஆண் நிர்வாணப்படங்களும் நிறைய இருக்கின்றன.

Art Picture 6ஒரு வேளை, இங்கே இருப்பவர்கள் ஆண் ஓவியர்கள் என்பதனால்தானோஎன்னவோ..பெண் நிர்வாணப்படங்கள் அதிகமாக வருகின்றன. பெண் ஓவியர்கள்இல்லை. இருந்தால் ஆண் நிர்வாணப்படங்களும் வரலாம். நிர்வாணப்படத்தில்ஆபாசமோ, தவறோ இருப்பதாக எனக்குப்படவில்லை.

ஓவியத்துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற விஷயங்களை விமர்சனம் செய்கிற மாதிரிஓவியர்களையும் விமர்சனம் செய்ய விமர்சகர்கள் வேண்டும். விமர்சனம்இருந்தால்தான் எந்தத்துறையும் பலப்படும, வளப்படும்,

பாரதியார் உயிரோடு இருந்தபொழுது அவரை எவரும் கண்டு கொள்ளவில்லை.இறந்த பிறகு அவருடைய பாடல்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.இதே மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது. அது ஒவியத் துறையிலும் கூடஇருக்கிறது.

துறையில் சின்னச சின்ன குறைகள் இருந்தாலும்.. நாடு, சர்வதேச எல்லை என்கிறஎல்லைகள் இல்லாமல் ஓவிய பரிமாற்றங்கலள் நடந்து கொண்டிருக்கிறது.ஓவியத்திற்கு மொழி அவசியமில்லை என்பதால்.. பல மடங்கு பரிணாம வளர்ச்சிஏற்பட்டிருக்கிறது என்கிறார் ஓவியர் ஆதிமூலம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X