Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வலுவான நிலையில் இலங்கை: ஜெயசூர்யா-அட்டபட்டு சாதனை

Published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கண்டி:

பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் நடைபெற்று 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட்டெஸ்ட் போட்டியில் இலங்கை வலுவான நிலையில் உள்ளது.

ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 449ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கேப்டன்ஜெயசூர்யா, அட்டபட்டு இருவரும் முதல் விக்கெட்டுக்கு 335 ரன்கள் எடுத்து சாதனைபடைத்தனர்.

புதன்கிழமை துவங்கிய இந்த டெஸ்டின் முதல் நாளன்று இலங்கை அணி விக்கெட்இழப்பின்றி 140 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக ஆட்டம் பாதியில்நிறுத்தப்பட்டது.

வியாழக்கிழமை காலை ஆட்டம் மீண்டும் தொடங்கியது. துவக்கத்திலிருந்தேஜெயசூர்யாவும், அட்டபட்டும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரையும்அவுட்டாக்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பாகிஸ்தான் கேப்டன் மோயின் கானும், பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தார்.இறுதியில் இலங்கை அணியின் எண்ணிக்கை 335 ஆக இருந்தபோது 188 ரன்கள்எடுத்த நிலையில் அப்துர் ரஸாக் பந்துவீச்சில் ஜெயசூர்யா அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நின்று ஆடாமல் விரைவில் அவுட்டாகினர்.மற்றொரு முனையில் அட்டபட்டு நிதானமாக ஆடினார். ஆட்டநேர முடிவில்அட்டபட்டு 199 ரன்களுடனும், தர்மசேனா 4 ரன்களுடனும் அவுட்டாகாமல்இருந்தனர். 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இலங்கை விரைவாக இழந்தது.

பாகிஸ்தான் அணியில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும், அப்துர் ரஸாக் 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST