For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

உறவை வலுப்படுத்த ஒரு பயணம்

டெல்லி:

பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்க பயணம் இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்கூறியுள்ளது.

ஐ. நா. சபை சார்பில் நடத்தப்படும் மில்லனியம் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 5-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை 12 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோவிற்குச் செல்லும் பிரதமர் அங்கு அதிபர் கிளின்டனை சந்தித்துப் பேசுவார். இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின்பொதுநலன், வர்த்தக, பொருளாதார மேம்பாடு குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

கடந்த மார்ச்சில் கிளின்டனின் இந்திய வருகைக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவு வலுப்பட்டது. அந்த உறவை இன்னும் வலுப்படுத்தும் வகையில்வாஜ்பாயின் அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X