Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

100 பேரைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதி சுட்டுக் கொலை

Published: Wednesday, September 6, 2000, 5:30 [IST]

ஸ்ரீநகர்:

100 பேரை கொலை செய்துள்ள காஷ்மீர் தீவிரவாதியை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தீவிரவாதியின் பெயர் குலாம் ஹசன் தர் என்ற குல்ஷன். இவன் ஹிஸ்புல் முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்தவன்.

ஜம்மூ-காஷ்மீரில் உள்ள புனிதத் தலமான சரார்-ஏ-ஷெரீப் அருகே காட்டுப் பகுதியில் இவனும் இவனது கும்பலும்பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காட்டுக்குள் புகுந்து தேடுதல் வேட்டைநடத்தினர்.

அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் இக் கும்பல் சிக்கியது. படையினர் மீது தீவிரவாதக் கும்பல் துப்பாக்கிகளால்சுட்டது. பதிலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 4 மணி நேரம் நடந்தது.

இறுதியில் 4 தீவிரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் குல்ஷனும் அடங்குவான்.

ஹிெஸ்புல் முஜாஹீதின் அமைப்பின் தெற்குக் காஷ்மீர் பிரிவுக்கு இவன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தான். இவனும் இவனதுகூட்டாளிகளும் கடும் கொலை வெறி கொண்டவர்கள். இவன் மட்டும் சுமார் 100 பேரை கொலை செய்துள்ளான். பல ஆணடுகளாரராணுவத்தாலும், போலீசாராலும் தேடப்பட்டு வந்தவன் இவன் என போலீஸ் ஐ.ஜி (காஷ்மீர் மணடலம்) அசோக் பான்தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள், பல சிறப்புப் போலீஸ் படை வீரர்களையும் இவன் சுட்டு வீழ்த்தியுள்ளான்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter