Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என்னை பிடிக்க முயற்சி செய்யக் கூடாது: வீரப்பனின் புதிய நிபந்தனை

Published: Tuesday, October 17, 2000, 5:30 [IST]

சென்னை:

ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமென்றால் என்னைப் பிடிக்க இரு மாநில அரசுகளும் முயற்சி செய்யக் கூடாது எனவீரப்பன் புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

கமாண்டோக்களைக் கொண்டோ அல்லது சிறப்பு அதிரடிப் படையைக் கொண்டோ காட்டுக்குள் நுழைந்து என்னை பிடிக்கமுயற்சி செய்யக் கூடாது என வீரப்பன் கூறியுள்ளார். இதற்கான உத்தரவாதத்தை இரு அரசுகளும் கொடுத்தால் தான்ராஜ்குமாரை விடுவிப்பேன் எனவும் வீரப்பன் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனையை தான் விடுவித்த ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜூவிடமும், கோபால், நெடுமாறனிடமும்வீரப்பன் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது ராஜ்குமாரும், அவரது உறவினர் நாகேசும் வீரப்பன் பிடியில் உள்ளனர்.

5-வது முறையாக காட்டுக்குச் சென்ற கோபால் தோல்வியுடன் சென்னை திரும்பி விட்டார். நெடுமாறனும் மற்ற 2 பேர்கொண்ட தூதுக் குழுவும் காட்டிலிருந்து பிற்பகலில் சென்னை திரும்பியவுடன் அவர்களுடன் சேர்ந்து முதல்வர்கருணநிதியை சந்திக்கிறார் கோபால்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST