Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ராணியை (ஜெயலலிதாவை) மீட்பேன் நடராஜன் சூளுரை

Published: Sunday, October 22, 2000, 5:30 [IST]

திருநெல்வேலி:

ஜெயலலிதாவுக்கு பொய் வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது. அவரை நான் மீட்பேன் நடராஜன் எனக் கூறியுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் எழுதிய பேரரிஞர் அண்ணாவின் பேருரைகள் என்ற நூல் அறிமுக விழா என்ற நிகழ்ச்சி நெல்லை சகுந்தலா - சுமங்கலி திருமணமண்டபத்தில் சனிக்கிழமையன்று நடந்தது. இந்த விழாவிற்கு மதுரை ஆதினம் தலைமை தாங்கினார்.

அந்த விழாவில் நடராஜன் பேசியதாவது:

ஜெயலலிதாவுக்கு பொய் வழக்கில் சிறை தண்டனை கிடைத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக சிறை தண்டனை கொடுத்தால், ஜெயலலிதாவைசிறையில் அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவ்வாறு அவர் சிறையில் அடைக்கப்பட்டால் மக்களது அனுதாப அலை ஜெயலலிதா பக்கம்திரும்பி விடும்.

அது தேர்தலில் தி.மு.க.வைப் பாதிக்கும் என்பதால் மூன்று ஆண்டு சிறை தண்டனை கொடுத்து ஜெயலலிதாவை சிறையில் அடைக்காமல்விட்டுவிட்டார்கள்.

நான் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி வழக்கு போட்டால் அந்த வழக்கை சந்திக்கிறேன். கலைஞர் அவர்களே நீங்கள் குயினுக்குத்தான்(ஜெயலலிதா) செக் வைத்திருக்கிறீர்கள். இந்த கிங்குக்கு (நடராஜன்) இல்லை. நான் குயினை மீட்பேன் என அவர் பேசினார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs