கோபாலிடம் சிபிஐ விசாரணை?

வெள்ளிக்கிழமை, மே 26, 2000, 5:30 [IST]
கோவை:

கோபாலிடம் வீரப்பனைப் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் கர்நாடக அமைச்சரும்,திரைப்பட இயக்குநருமான ரமேஷ் தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரமேஷ் கூறியதாவது:

நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற வீரப்பனிடம் 5 முறை நக்கீரன் கோபால் தூது சென்றும் மீட்க முடியவில்லை.ஆனால், ஒரு முறை சென்ற நெடுமாறன் அவரை மீட்டுக் கொண்டு வந்தார். அவர் தனது உடல்நலத்தையும்பொருட்படுத்தாமல், எங்களது வேண்டுகோளை ஏற்றுக் காட்டுக்குச் சென்றார்.

ஆனால், தமிழக போலீசார் அவரது செயலைப் பாராட்டாமல், சென்னையில் அவரை கைது செய்துதுன்புறுத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

நக்கீரன் கோபால் 5 முறை காட்டுக்குள் சென்றும் வீரப்பனிடமிருந்து மீட்க முடியவில்லை. ஆனால், வீரப்பன்இருக்கும் இடம் எங்குள்ளது என நக்கீரன் கோபாலுக்குத் தெரியும். எனவே, நக்கீரன் கோபாலைஅதிரடிப்படையினர் அழைத்துச் சென்று வீரப்பன் இருக்கும் இடத்தை அறிய வேண்டும். அப்போது தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும்.

வீரப்பனிடம் 5 முறை சென்றபோது நடந்த பேரம் குறித்து நக்கீரன் கோபாலிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்.

கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பெங்களூரில் ஒரு லட்சம்குடியிருப்புகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகராட்சித் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றும்தமிழர்களுக்கு வீடுகளை அரசுக் கட்டிக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தஉதவியையும் அரசு செய்யவில்லை என்றார் ரமேஷ்.
IPL, Feroz Shah Kotla, Delhi
Royal Challengers Bangalore: 138 / 1, 15.1 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
West Indies: 177 / 4, 67 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 6 wickets