Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ரித்திக் விவகாரம்: நேபாளம் ஸ்தம்பித்தது

Published: Thursday, December 28, 2000, 5:30 [IST]

காட்மாண்டு:

நேபாள மக்களுக்கு எதிராக கருத்துக் கூறிய ஹிந்தி நடிகர் ரித்திக் க்ரோஷனின் பேட்டிக்குக் கண்டனம் தெரிவித்து நேபாளத்தில் வியாழக்கிழமைநேபாளத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் கடை பிடிக்கப்படுகிறது.

இதையடுத்து நேபாளத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வணிக ஸ்தலங்கள் ஸ்தம்பித்தன. சாலைகள் பஸ், ஆட்டோ எதுவுமில்லாமல்வெறிச்சோடிக் கிடந்தன.

எதிர்ப்பாளர்கள் சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களைப் போட்டு போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தினர். பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள்வன்முறையில் இறங்க வேண்டாம் என்று நேபாள உதவி பிரதமர் ராம சந்திர பவுடல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நேபாளத்தில் கலவரத்தில் ஈடுபடுபவர்களுடனும், மாணவர்களுடன் அமைதி திரும்பும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் அவர்கூறியுள்ளார்.

முன்னதாக, ரித்திக் ரோஷன் தனது பேட்டியில் நேபாள நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார். அதாவது தனக்கு நேபாள நாட்டையோ,அங்கு வாழும் மக்களையோ பிடிக்காது என்று கூறியிருந்தாகக் கூறப்படுகிறது.

இதை எதிர்த்து வன்முறையாளர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸார் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கிச் சூடுநடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

இருப்பினும் ரித்திக் ரோஷனோ, நேபாள மக்களுக்கு எதிரான தான் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று இன்னொரு பேட்டியில் கூறியுள்ளார்.

நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்குள்ள திரையரங்குகளில் ஹிருத்திக் க்ரோஷனின் படங்களைவெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டிலிருந்து நேபாளுக்கு வரும் பயணிகள் யாரும் தங்கள் பயணத்தை தற்போதைக்குத் தள்ளி வைக்க வேண்டும்என்று நேபாளத்திலுள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தூதரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI