Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சந்திரிகாவின் தேர்தல் வழக்கு .. எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]

கொழும்பு:

இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்கா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துஎதிர்கட்சிகள் தொடர்ந்த வழக்கின் தன்மையை மாற்ற உச்ச நீதிமன்றம் முயல்வதாகஇலங்கையின் பிராதன எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (யு.என்.பி) குற்றம்சாட்டியுள்ளது.

1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் யு.என்.பி.தோல்வியடைந்தது. இந்த கட்சியினர் சந்திரிகா குமாரதுங்கா அதிபராகதேர்ந்தெடுக்கப்பட்டதில் முறை கேடு நடந்திருப்பதாக கூறி வழக்க்கு தொடுத்தனர்

ஆனால் நீதிபதி சில்வா, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், குமாரதுங்காமுறையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாவும் தீர்ப்பளித்தார்.

இது குறித்து யு.என்.பி.யின் துணை தலைவர் காமினி அதுகுராலே வெளியிட்டுள்ளஇரண்டு பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு பத்திரிக்கைகள் சந்திரிகாவை ஆதரித்து செய்தி வெளியிட்டதும், வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடந்த இடங்களில் முறைகேடுகள் நடந்ததுகுறித்து கூறப்பட்ட புகாரில் சாட்சிகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் வழக்கின் போக்கை மாற்றும் விதமாகஅமைந்துள்ளது. இந் நிலையில் விசாரணையை தொடர வேண்டாம் என வக்கீல்கள்என்னிடம் கூறியுள்ளார்கள் என கூறினார்.

இந்த வழக்கில் மொத்தம் 1.940 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST