Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விருப்ப ஓய்வு கேட்கும் பாங்க் ஆப் பரோடா ஊழியர்கள்

Published: Thursday, February 22, 2001, 5:30 [IST]

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் 3, 000 அதிகாரிகள் உள்பட 6,700 பாஙக் ஆப் பரோடா வங்கி ஊழியர்கள் விருப்பு ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றுவங்கி மேலாளர் ஷெனாய் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக சபை உறுப்பினர்களிடம் பேசிய பிறகு ஷெனாய் நிருபர்களிடம் கூறியதாவது:

பாங்க் ஆப் பரோடா வங்கி அதிகாரிகள் தவிர 1,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் விருப்பு ஓய்வுத்திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிப்பதால் அடுத்த 5 வருடங்களில் வங்கிக்கு ரூ 700 கோடி வரை லாபம் ஏற்படும்.

ஆனால் அதே நேரம் 13 சதவீத ஊழியர்களை (அதாவது 46,000) விருப்பு ஓய்வுத்திட்டத்தின் மூலம் நீக்குவதால் வங்கிப்பணிகளில் பாதிப்பு ஏற்படும். பிறஊழியர்களின் வேலைச் சுமை அதிகரிக்கும்.

இந்த நிதியாண்டில் நஷ்டத்தில் இயங்கும் பாங்க் ஆப் பரோடாவின் 300 கிளைகளை உடனடியாக நீக்கும் எண்ணமோ, அவற்றைப் பிற கிளைகளுடன்இணைக்கும் எண்ணமோ இப்போதைக்கு இல்லை என்றார்.

மேலும் பாங்க் ஆப் பரோடா கொடுத்து வரும் 20 சதவீத கடன்வசதி குறித்து பதில் கூற மறுத்தார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Chennai Super Kings: 7 / 0, 0.5 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs