Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாக்-நியூசிலாந்து ஒரு நாள் போட்டி தொடங்கியது

Published: Thursday, February 22, 2001, 5:30 [IST]

வெலிங்டன்:

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸான சோய்ப் அக்தர் தொடை வலி காரணமாக வியாழக்கிழமை தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான3வது போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அணியில் இடம்பெறும் அஸார் மெஹ்மூத் தனது 100 சர்வதேச ஒருதினப் போட்டியில் பங்குபெற்றுள்ளார்.

பல மாற்றங்களுடன் 3வது ஒரு நாள் போட்டிக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியை டாஸில் ஜெயித்த நியூஸிலாந்து பேட்டிங் செய்ய அழைத்தது.

பாகிஸ்தானின் புதுமுகம் இம்ரான் பர்ஹத்திற்கு பதில் இடம்பெற்ற பாகிஸ்தான் பீல்டிங் மன்னன் இம்ரான் நஸீர் இப்போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தைஆடினார்.(23 பந்துகளில் 32 ரன்கள்).சயீத் அன்வரின் 57 ரன்களுடன் யோகானா சேகரித்த 47 ரன்களோடு பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுகள்இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்தொடங்கிய நியூஸிலாந்து 49 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218ரன்கள்மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேக்மிலன்- வின்சென்ட் இருவரும் நியூஸிலாந்தை வெற்றிக்கு இட்டுசெல்வர் என எதிர்பார்த்த நிலையில்சக்லைன் வின்சென்ட் விக்கெட்டை பறித்து நியூஸிலாந்தின் வெற்றியை தடுத்து விட்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் சக்லைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இப்போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Rajasthan Royals won by 4 wickets