Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நார்த்தர்ன் அலையன்ஸ் பிடியில் காண்டஹார் ஏர்போர்ட்

Published: Tuesday, November 13, 2001, 5:30 [IST]

தோகா:

ஆப்கானிஸ்தான் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் காண்டஹார் விமான நிலையத்தையும் இன்று(செவ்வாய்க்கிழமை) கைப்பற்றியுள்ளனர் என்று உறுதி செய்ய முடியாத தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் இது காண்டஹாரின் பிரதான விமான நிலையம் இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.

அமெரிக்க விமானங்கள் தலிபான் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடிக்க, சிறிது சிறிதாகமுன்னேறிய நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் காண்டஹார் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆனால் எதிர்ப் படையினர் காண்டஹார் விமான நிலையத்தைப் பிடித்துள்ளதை தலிபான்கள் மறுத்துள்ளனர்.

காண்டஹார் விமான தளம் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஷெல் தாக்குதலில் அல்-ஜசீரா டி.வி. நிலையம் தகர்ப்பு

இதற்கிடையே நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் காபூல் நகருக்குள் புகுந்தபோது, அங்குள்ள அல்-ஜசீராதொலைக்காட்சி நிலையம் ஷெல் குண்டுகள் மூலம் தாக்கப்பட்டது.

இதையடுத்து, அல்-ஜசீரா தொலைக்காட்சி நிலைய ஒளிபரப்புகள் தடைபட்டன. Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI
NET Vs SA - Only ODI at VRA Ground Fri 31st May ODI
ENG Vs NZ - 2nd ODI at The Ageas Bowl Sun 2nd Jun ODI