For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை அரசுக்கு அதிமுக ஆதரவு வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு அளித்துவந்த ஆதரவை அதிமுக வாபஸ்பெற்றுக்கொண்டது.

பாண்டிச்சேரியில் முதல்வர் பதவிவகித்து வந்த சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, புதியமுதல்வராக ரங்கசாமி கடந்த அக்டோபர் 27ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து கடந்தஞாயிற்றுக்கிழமை 3 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு அதிமுக அளித்துவந்த ஆதரவை வாபஸ்பெற்றுக்கொள்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுவை துணைநிலைய ஆளுநர் ரஜினிராய்க்கு பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் நரேந்திரகுமார்அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் (அதிமுக) வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.

அதிமுகவுக்கு பாண்டிச்சேரி சட்டசபையில் 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் சட்டமன்ற சபாநாயகராகஇருந்துவரும் ராமச்சந்திரனும் அடங்குவார்.

ராமச்சந்திரன் விரைவில் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 15 எம்.எல்.ஏக்களும், 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவும்இருப்பதால், அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை.

மேலும் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தனது ஆதரவை காங்கிரசுக்கு தொடர்ந்து அளித்துவருவதும் குறிப்பிடத் தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X