For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்ளையடிக்கும் ஆட்டோக்கள், தனியார் பஸ்கள்: பெரும் அவதியில் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் ஸ்தம்பித்துள்ள போக்குவரத்தை சமாளிக்க தனியார்பஸ்களின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. ஆனால் அவர்கள் பயணிகளிடம் பெரும் கொள்ளை அடித்துவருகின்றனர்.

இதனால் மக்களுக்கும் இந்த பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இந்த பஸ்உரிமையாளர்களைத் தட்டிக் கேட்க முடியாத தர்மசங்கடமான நிலையில் அரசு சிக்கியுள்ளது.

சென்னை நகரில் பஸ் போக்குவரத்தை சமாளிக்க மினி பஸ்கள், தனியார் பஸ்கள், வேன்கள், பள்ளி, கல்லூரிபஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவற்றை அரசு அமர்த்தியுள்ளது. கைவசம் உள்ள அதிமுக ஆதரவு டிரைவர்கள்,கண்டக்டர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட டிரைவர், கண்டக்டர்களை வைத்து மிச்சமுள்ள பஸ்களை ஓட்டிவருகிறது. இந்த ஏற்பாட்டால் ஓரளவு நெருக்கடி தீர்ந்தது.

ஆனால் தலை வலி போய் திருகுவலி வந்தது போல தனியார் வாகனங்கள் பயணிகளிடம் கிடைத்த வரை லாபம்என்பது போல பகல் கொள்ளை அடித்து வருகின்றனர். மினி பஸ்கள் எல்லாம் பக்கத்து மாவட்டங்களிலிருந்துவரவழைக்கப்பட்டவை. இந்த பஸ்களில் பிளாட் ரேட்டாக ரூ. 5 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எங்குவேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம், இறங்கிக் கொள்ளலாம். டிக்கெட் எல்லாம் தர மாட்டார்கள். இந்தபஸ்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல்தான் போகிறது.

ஆனால், ஆம்னி பஸ்காரர்கள் தொல்லைதான் அதிகம். ஆம்னி பஸ் என்பதால் மினிமம் ரூ. 10ம் அதிகபட்சமாக ரூ.20ம் கட்டணம் நிர்ணயித்துள்ளார்கள். உதாரணமாக தாம்பரத்திலிருந்து பாரிமுனை வர விரும்புபவர் ரூ. 20கொடுத்து வர வேண்டும். அதேசமயம் பாரிமுனையிலிருந்து அண்ணா சாலைக்கு வர விரும்புபவர் ரூ. 10 தரவேண்டும். வேறு வழியில்லாமல் பயணிகள் கொடுத்து அழ வேண்டியுள்ளது.

இதே நிலைதான் பிற வாகனங்களிலும்.

உச்சபட்சமாக மிக பயங்கர கொள்ளை அடித்து வருபவர்கள் ஆட்டோகாரர்கள் தான். இவர்கள் தான் மக்கள்வயிற்றெரிச்சலை அதிகபட்சமாக வாங்கிக் கொட்டுக் கொள்பவர்கள்.

ரூ.50 கொடு, 100 கொடு என்று கூசாமல் கேட்டு மக்களை திகைக்க வைக்கின்றனர். கொடுத்தால் வா,இல்லாவிட்டால் போய்க்கிட்டே இரு என்று உட்கார்ந்து கொண்டே கூலாக கூறுகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்த்து பொதுமக்கள் திகைத்து போய் அதிர்ச்சியில் உள்ளனர். அண்ணா சாலைக்கு,சைதாப்பேட்டையிலிருந்து ஒருவர் சென்று வீடு திரும்ப வேண்டுமானால் கையில் குறைந்தது ரூ. 50 ஆவது இருக்கவேண்டும்.

தினக்கூலிகள், குறைந்த ஊதியம் வாங்கும் அலுவலர்கள் தான் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் சம்பளமே ரூ. 50 தான். அதையும் ஆட்டோக்காரனிடம் கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று இவர்கள்வேலைக்கே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எது எப்படியோ, பஸ் ஸ்டிரைக் உடனடியாக முடிவுக்கு வந்தால் தான் சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள்நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். இல்லாவிட்டால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விடும் நிலைஏற்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X