Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

"போடோ"வை வாபஸ் பெறக் கோரி 30ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கண்டனப் பேரணி

Published: Tuesday, November 13, 2001, 5:30 [IST]

சென்னை:

போடோ சட்டத்தை எதிர்த்துப் போராட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னையில் வரும் 30ம் தேதிகண்டனப் பேரணி நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்த போது அவர் மேலும்கூறியதாவது,

மக்கள் விரோத சட்டமான "போடோ" சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்று கோரி நாங்கள்ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இதனால் அந்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 30 ம்தேதி சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்று உடனே அவர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கதமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அவர்கள் மீது தமிழக அரசு எடுத்துவரும் பழிவாங்கும்நடவடிக்கையைக் கைவிட்டு, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs