Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு தமிழக தே.ஜ. கூட்டணி கடும் கண்டனம்

Published: Wednesday, January 16, 2002, 5:30 [IST]

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் இடைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் கூறியதற்கு தமிழக தேசியஜனநாயகக் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆண்டிப்பட்டியிலும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்துவது குறித்து இன்று (புதன்கிழமை) மாலைசென்னையில் நடந்த தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் திமுக தலைவர்கருணாநிதி கூறியதாவது:

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளிலுமே போலி வாக்காளர்கள் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டதுகுறித்துப் புகார் கொடுத்தும், ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளைவிட ஆண்டிப்பட்டியில்தான் அதிக அளவில்வாக்காளர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன.

அதிமுகவைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தும், தேர்தல் கமிஷன்எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததை மிகுந்த வருத்தத்துடன் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆனால் இன்று மீண்டும் தேர்தல் கமிஷனிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள்கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்று, ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை ஒத்திவைக்கும் என்று நம்புகிறோம்.

அதையும் மீறி ஆண்டிப்பட்டியில் கட்டாயம் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தாலும் நாங்கள்பயந்துவிட மாட்டோம். முன்வைத்த காலை எப்போதும் நாங்கள் பின் வைக்க மாட்டோம்.

தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான செயல் அல்ல. எனவே தேர்தலில்கட்டாயம் போட்டியிடுவோம். திமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

திமுக சார்பில் ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்கருணாநிதி.

இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி, பாமக பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி உள்பட பலதவைர்கள் கலந்து கொண்டனர். Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL