கோவை மாவட்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி நிறுவனங்களை சோதனையிட போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
கோவையில் உள்ள சில கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து டெபாசிட்தொகையை வாங்கிக் கொண்டு அவர்களது வேலையை முடிக்காமல் மோசடி செய்து விட்டதாக போலீசாருக்குப்புகார்கள் வந்தன.
இதையடுத்து சமீபத்தில் இரண்டு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் சமீபத்தில் ஜெம் இன்போடெக் என்ற நிறுவனத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.அப்போது ரூ.50 கோடி அளவுக்கு டெபாசிட் பெறப்பட்டுள்ளதும், ஆனால் குறிப்பிட்ட காலத்தில்வாடிக்கையாளர்களின் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இந்த நிலையில் கோவை நகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி நிறுவனங்கள்குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து கோவை போலீசாருக்குகண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவை நகரில் சிறப்பு விசாரணைப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் படை கோவைநகரில் உள்ள அனைத்து டேட்டா எண்ட்ரி நிறுவனங்களிலும் திடீர் சோதனை நடத்தி விசாரணை செய்யதிட்டமிட்டுள்ளது.


















