Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக முன்னணி

Published: Sunday, June 2, 2002, 5:30 [IST]

சென்னை:

இடைத்தேர்தல் நடந்து முடிந்த அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடி தொகுதிகளில் அதிமுக முன்னணியில் உள்ளது.

இந்தத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல் சுற்று வாக்குஎண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் அதிமுகவே முன்னணியில் உள்ளது.

அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் பூவராகமூர்த்தியும் வாணியம்பாடியில் ஆர்.வடிவேலுவும் முன்னணியில்உள்ளனர்.

அச்சிறுப்பாக்கத்தில் திமுக கூட்டணியுடன் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பார்வேந்தனும் வாணியம்பாடியில்திமுக சார்பில் போட்டியிட்ட நாகூர் ஹனிபாவும் பின் தங்கியுள்ளனர்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்:

வாணியம்பாடி:

ஆர். வடிவேலு (அதிமுக)- 2,550

நாகூர் ஹனிபா (திமுக)- 2,248

அச்சிறுப்பாக்கம்:

பூவராகமூர்த்தி (அதிமுக)- 3,894

பார்வேந்தன் (பா.ம.க.)- 1,853

மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்ததால் வாக்கு எண்ணிக்கையும் மிக வேகமாக நடந்துவருகிறது. சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST