டெல்லி:
அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) விலை உயர்ந்தால் கடந்த 3ம் தேதி பெட்ரோல், டீசல்விலைகள் பெருமளவு உயர்த்தப்பட்டன. நேற்று முன் தினமும் மீண்டும் 30 பைசா அளவுக்கு விலைகள் உயர்ந்தன.
இதனால் இப்போது பெட்ரோல் விலை (சென்னையில்) லிட்டருக்கு ரூ 31.30 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.19.88 ஆகவும் உள்ளது.
இந் நிலையில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சரியத் தொடங்கியுதுள்ளது. இதனால்விலைகளைக் குறைக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து வரும் 1ம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 50 பைசா குறைக்கப்படவுள்ளது.


















