Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கலாம் வேட்பு மனு: வாஜ்பாய், ஜெ முன்மொழிவர்

Published: Monday, June 17, 2002, 5:30 [IST]

சென்னை:

டாக்டர் அப்துல் கலாம் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

கலாமை அழைத்துச் செல்வதற்காக பிரதமர் உத்தரவின் பேரில் நேற்றிரவு சென்னை வந்தார் பிரமோத் மஜாகன். விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராஜ்யசபாவின் செயலாளர் தான் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் தான் வேட்பு மனு தாக்கல்செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு ராஜ்யசபா செயலகத்தில் அப்துல் கலாம் வேட்பு மனுத்தாக்கல் செய்வார். அவரது வேட்புமனுவை பிரதமர் வாஜ்பாயே முன்மொழிந்து கையெழுத்துடுவார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வேட்பு மனுவை முன் மொழிவார்கள் என்றுஎதிர்பார்க்கிறோம். இதற்காக ஜெயலலிதாவும் நாயுடுவும் டெல்லி வர வாய்ப்புள்ளது என்றார்.

இதற்கிடையே அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் அவருக்காக தனியாக வேட்பு மனு தாக்கல் செயய முடிவுசெய்துள்ளது. Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST