For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போராட்டம் நடத்த சென்ற திமுகவினர்- போலீசார் கடும் மோதல்: பரிதி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து இன்று சென்னையில் நடந்தஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்தியதாக்குதலில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி காயமடைந்தார்.

அவரையும் நூற்றுக்கணக்கான திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர்ளுக்கு தேர்தல்கமிஷனும் போலீசாரும் துணை போனதாகக் கூறி இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மேயர் ஸ்டாலின், பரிதிஇளம்வழுதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மாவட்ட திமுகதொண்டர்களும் ஏராளமான அளவில் கூடினர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை 8 மணி முதலே கலெக்டர் அலுவலகம் முன் கூடத்தொடங்கிவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான கார், வேன்களில் திமுகவினர் வந்த வண்ணம் இருந்தனர்.

இந் நிலையில் திடீரென இந்த வாகனங்களை போர் நினைவுச் சின்னம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். திமுகதொண்டர்களை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல விடாமல் தடுத்தனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்குச் செல்வதால் அவரது கார்களுக்கு வழி செய்து தரும் வகையில்இவர்கள் தடுக்கப்பட்டனர்.

தடுக்கப்பட்ட திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் திமுக எம்.எல்.ஏவானபரிதி இளம்வழுதிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் போர் நினைவுச் சின்னம் அருகே வந்தார்.

போராட்டத்தில் பங்கேற்க திமுகவினரை அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரினார். இதற்குபோலீசார் மறுப்பு தெரிவிக்கவே பரிதிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து திமுக தொண்டர்களுடன் அரசு பொது மருத்துவமனை அருகே வந்த பரிதி இளம்வழுதிஅங்கு நடுரோட்டில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

திமுக தொண்டர்களும் அவருடன் சாலையில் அமர்ந்துவிட போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை சிறிதும் எதிர்பாராத போலீசார் அங்கு விரைந்தனர். ஆயிரக்கணக்கானபோலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பரிதியைத் தூக்கி காரில் ஏற்ற போலீசார் முயன்றனர். பரிதி மறுக்கவே வலுக்கட்டாயமாக தூக்கி காரில் திணித்துகதவை மூடினர். இதில் கார் கதவில் சிக்கி பரிதியின் விரல் நசுங்கியது. போலீசாருடன் நடந்த தள்ளுமுள்ளில்அவரது செல்போனும் உடைந்தது.

இதையடுத்து பரிதி மீண்டும் நடுரோட்டில் வந்தமர்ந்தார். அவரை சுற்றி வளைத்து வாக்குவாதம் செய்தபோலீசாரிடம், நேற்று தான் எம்.எல்.ஏ., எம்.பி. வந்தால் எழுந்து நின்று அதிகாரிகள் மரியாதை செய்ய வேண்டும்என்று மத்திய அரசு ஆர்டர் போட்டது. நீங்கள் எழுந்து கூட நிற்கவேண்டாம். கொஞ்சமாவது நாகரீகமாக,கண்ணியமாக நடந்து கொள்ளலாம். அடாவடி செய்து அராஜகத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

இதையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே மீண்டும் தகராறு மூண்டது. இரு தரப்பினரும்விரல்களை நீட்டி ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் பரிதியை அள்ளி போலீஸ் வேனில் ஏற்றினர் காவலர்கள். அவரையும் பிற திமுகவினரையும் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து காவல்துறை இணை கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்,

போக்குவரத்தை சரி செய்வதற்காக திமுகவினரை வேறு பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினோம். ஆனால்,அதைக் கேட்காமல் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய மேயர் ஸ்டாலின்,

இந்த மாபெரும் போராட்டத்தைப் பார்த்தும் ஆட்சியாளர்கள் திருந்தாவிட்டால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமுகவினர் கலந்து கொண்டனர். பெண்களும் அதிகஎண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X