Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

துப்பாக்கி பாதுகாப்புடன் நடக்கும் கள்ளச்சாராய விற்பனை

Published: Tuesday, June 18, 2002, 5:30 [IST]

தர்மபுரி:

தர்மபுரி காட்டுப் பகுதியில் துப்பாக்கிகள் பாதுகாப்புடன் கள்ளச் சாராய விற்பனை மிக ஜோராக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.

அரூர் அருகே காட்டுப் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள்என பேதம் பார்க்காமல் அனைவரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

போட்டி கள்ளச் சாராய கும்பல்களை சமாளிக்க இவர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது தான்அதிர்ச்சி தரும் லேட்டஸ்ட் தகவல். உத்தரப் பிரதேத்தின் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் மாதிரி இந்தப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் மிக சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இங்கு வழக்கான கள்ளச் சாராய ரெய்ட் நடத்த தனி போலீஸ் படை காட்டுக்குள் நுழைந்தது. அப்போதுபோலீசாரைக் கண்டவுடன் கள்ளச் சாராய கும்பல் தப்பியோடியது.

அவர்கள் ஓடிவிட்ட பின்னர் அந்த இடத்தை போலீசார் சோதனையிட்டபோது 4 நாட்டுத் துப்பாக்கிகள் சிக்கின.மேலும் குண்டுகளும் சிக்கின. பல ஊரல்களில் வைக்கப்படிந்திருந்த லிட்டக் கணக்கிலான கள்ளச் சாராயம், கோழிக்கறி, பிரியாணி பொட்டலங்கள், ஊறுகாய் பாட்டில்களும் சிக்கின.

இந்தக் கும்பல் எத்தனை பேரை காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொன்றது என்று தெரியவில்லை. Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST