டெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்களாக இல.கணேசன், லலிதா குமாரமங்கலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார் இல.கணேசன். பா.ஜ.க. அரசில் மத்திய அமைச்சராக இருந்தரங்கராஜன் குமாரங்கலத்தின் சகோதரி லலிதாவும் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கைய்யா நாயுடு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரும்தேசிய செயலாளர்களாக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த சஞ்சய் ஜோஷியும் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் பொருளாராக ராம்தாஸ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 72 புதிய நிர்வாகிகளை நாயுடு நியமித்துள்ளார்.










