Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

7 டி.எம்.சி. நீர் விட காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகம் கோரிக்கை

Published: Monday, January 19, 2004, 5:30 [IST]

டெல்லி:

இன்று நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு 7 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசுஉடனடியாக காவிரியில் திறந்து விடவேண்டும் என்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிராணேஷ் கோரிக்கைவிடுத்தார்.

காவிரி டெல்டாப் பகுதிகளில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. மேட்டூர் அணையிலும் போதுமான தண்ணீர்இருப்பு இல்லை. இதைத் தொடர்ந்து காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தைக் கூட்டி கர்நாடகத்தை தண்ணீர் திறந்துவிடுமாறு வற்புறுத்த வேண்டும் என்று தமிழகம் கோரியது.

இந் நிலையில் இன்று காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் கூடியது. மத்திய நீர் வளத்துறைச்செயலாளர் வி.கே.துக்கல் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவைமாநில தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின்போது, சம்பா பயிரைக் காக்க உடனடியாக கர்நாடகம் 7 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார். இதற்கு கர்நாடக தலைமைச் செயலாளர் பட்டீல்,தமிழக அரசின் கோரிக்கையை கர்நாடக அரசிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதனையடுத்து துக்கல், குடியரசுத் தினத்திற்கு முன்னதாக கர்நாடக அரசு தனது பதிலைத் தெரிவிக்க வேண்டும்என்று கூறினார்.

மத்திய நீர் வளக் கமிஷனின் தலைவர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் தென் மாநிலங்களில்மழைப் பொழிவு, பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST