Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

15 ஆண்டுகளாக "போக்கு" காட்டிய "குட்டி" வீரப்பன் கைது!

Published: Monday, January 19, 2004, 5:30 [IST]

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாப்டூர் வனப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாகபோலீஸாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த குட்டி வீரப்பன் எனப்படும் தங்கவேலுவை போலீஸார்பிடித்துள்ளனர்.

சாப்டூர் வனப் பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து வன அலுவலர் துர்வாசன், ரேஞ்சர் ராமச்சந்திரன் தலைமையில் வனக்காவலர்கள் அங்கு விரைந்தனர்.

அப்போது ஒரு கும்பல் துப்பாக்கிகளைக் காட்டி அதிகாரிகளை மிரட்டியது. இருப்பினும் அதிகாரிகள் அக்கும்பலை வளைத்துப் பிடித்தனர். 2 பேர் பிடிபட்டனர், 2 பேர் தப்பி விட்டனர்.

பிடிபட்டவர்களில் ஒருவர் தங்கவேல் என்பது தெரியவந்தது. குட்டி வீரப்பன் என்று கூறப்படும் தங்கவேலு கடந்த15 ஆண்டுகளாக வன விலங்குகளை வேட்டையாடி வந்தார். போலீஸார் மற்றும் வனத்துறையினர் கண்ணில்சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

பிடிபட்டவர்களிடமிருந்து ஒரு எறும்புத் தின்னி, ஒரு நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பிடிபட்டது. எறும்புத்தின்னியை வனத்துறையினர் மீண்டும் வனத்திற்குள் விட்டு விட்டனர்.Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Kolkata Knight Riders decided to bat
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs