Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விடுதலை சிறுத்தைகள் நிலை என்ன? இன்று ஆலோசனை

Published: Monday, January 19, 2004, 5:30 [IST]

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிநிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

கட்சியின் மத்திய குழு கூடி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து முடிவு செய்யவுள்ளது. கட்சிபொதுச் செயலாளர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியில் சேர்ந்தோ அல்லது தனித்தோதேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணம் இல்லை.

எங்களை ஜாதிக் கட்சியாகப் பார்க்கக் கூடாது. அரசியல் சக்தியாக எங்களை திராவிடக் கட்சிகள் கருத வேண்டும்.வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர விரும்புகிறோம். அதை திமுக கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் வாக்களிக்க வருவோரில் 80 சதவீதம் பேர் தலித் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை திமுகஉள்ளிட்ட திராவிடக் கட்சிகள் மனதில் கொள்ள வேண்டும். திராவிடக் கட்சிகள் எங்களை ஒதுக்குவதால்தான்,சட்டசபை, நாடாளுமன்றத்தில் தலித் மக்களுக்கு போதுமான பிரதிநிதிகள் இல்லாத நிலை நிலவுகிறது.

தமிழக அளவிலும், தேசிய அளவிலும் மதச்சார்பற்ற அணி என்ற ஒன்றே கிடையாது. பா.ஜ.க. கூட்டணியின்செல்வாக்கிலிருந்து தப்பிப்பதற்காக அரசியல் பாதுகாப்புக்காக காங்கிரஸ் தலைமையிலான அணிஉருவாகியுள்ளது, அவ்வளவுதான். ஆனால் தலித்கள், சிறுபான்மையினர், இடதுசாரிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்துஅமைத்தால்தான் அதை மதச்சார்பற்ற அணி என்று கூற முடியும்.

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை நிறுத்த வேண்டும். இதற்காக எங்களது புதிய அமைப்பானதமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்ட தமிழ்த்திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

திமுக கூட்டணியில் இடம் பெற விடுதலைச் சிறுத்தைகள் விரும்பினாலும், ஜாதிக் கட்சிகளுக்கு தங்களதுகூட்டணியில் இடம் இல்லை என்று கருணாநதி கூறியுள்ளதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலக்கத்தில் உள்ளது.சமீபத்தில் வைகோவை பூந்தமல்லி பொடா நீதிமன்ற வளாகத்தில் சந்தித்த திருமாவளவன், தங்களையும்கூட்டணியில் சேர்க்க கருணாநிதியிடம் பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.