For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் சேரத் தயார்: திருமாவளவன் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு வந்தால் அதை மறுக்க மாட்டோம் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஜாதிக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் இடம் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகதெரிவித்துள்ளார். இதனால் தலித் கட்சிகளான புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய இரண்டும் பெரும்அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.

திமுக சின்னத்தில் மங்களூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன் தனது கட்சிக்குநாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது கட்சிக்குகூட்டணியில் இடம் இல்லை என்று கருணாநிதி கூறி விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவரதுகட்சியின் மத்திய குழு கூடி விவாதித்தது.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலித் மக்களின் ஓட்டுக்களை மட்டும் பெற அரசியல்கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் அவர்களுக்கு அங்கீகாரத்தைக் கொடுக்க அக் கட்சிகள் தொடர்ந்துமறுத்து வருகின்றன. இதை இனியும் பொறுத்துக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

எங்களை மதிக்கும், தலித் மக்களின் உணர்வுகளை மதிக்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர நாங்கள் தயாராகிவிட்டோம். அதிமுகவிலிருந்து அழைப்பு வந்தால் அதை நாங்கள் உதற மாட்டோம்.

தலித் விரோத மனப்பான்மை உள்ள கட்சிகளின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துத்தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தை காட்டவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எந்தப் பெரியார் இயக்கவாதியும், தலித்களை, ஜாதிக் கட்சிகளாகக் கருத மாட்டார்கள். எனவே கருணாநிதியும்தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார் திருமாவளவன்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் உறுதியான கூட்டணி உருவாகி வருகிறது. திமுக கூட்டணியில்காங்கிரஸ், மதிமுக, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன்முஸ்லீம் லீக், தமிழக பார்வர்ட் பிளாக் (வல்லரசு பிரிவு) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தென் தமிழ்நாட்டில் புதிய தமிழகம், வட தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகளும் பலத்துடன் உள்ளன. இதில்புதிய தமிழகத்தின் செல்வாக்கு ஓரளவு சரிந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தென்தமிழ்நாட்டிலும் தற்போது ஓரளவு பலம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இரு தலித் கட்சிகளையும், ஜாதிக் கட்சிகள் என்ற ரீதியில் கூட்டணியில் சேர்க்க முடியாதுஎன்று திமுக மறைமுகமாக தெரிவித்து விட்டது. தங்களையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வைகோவைபார்த்து திருமாவளவனும், கருணாநிதியை நேரில் பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருப்பினும் இருவருக்கும் உறுதியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுகவும் தங்களை கைகழுவி விட்டால், என்ன செய்வது என்ற யோசனையில் இக் கட்சிகள் உள்ளன.இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் தலித் மக்களின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி திமுக, அதிமுகவுக்குபாடம் புகட்ட இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதுவையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அப்போது, திமுகவிடம் தொங்குவதை விட பேசாமல், புதிய தமிழகத்துடன் கூட்டணி அமைத்து தலித் ஓட்டுக்களைஒட்டுமொத்தமாக நாமே பிரித்தால், திமுக கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் பெரும் இழப்பு ஏற்படும், அதன் மூலம்நமது பலத்தை அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.

இதன் மூலம் எதிர்காலத்தில் நமது கட்சிக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் பலரும்திருமாவளவனிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அதை திருமாவளவனும் மெளனமாக ஏற்றுக் கொண்டதாகக்கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சித் தலைமையுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ரகசியப்பேச்சுவார்த்தையில் இறங்கவுள்ளனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுவதுஎன்றும் அதன் மூலம் தலித்களின் பலத்தை நிரூபிப்பது என்றும் முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் 10, வட மாவட்டங்களில் 10 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடலாம் என்றுதெரிகிறது. எதிரும் புதிருமாக இருந்து வந்த இரு கட்சிகளும் சமீப காலமாக எதிர்ப்புப் போக்கைக் கைவிட்டுவிட்டு தனித்தனியே தங்களது செல்வாக்கை வளர்ப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளன. இதன் விளைவாக இருகட்சிகளுக்கும் தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சமீப காலமாக தென்காசி தொகுதியில் நல்ல செல்வாக்குஉருவாகியுள்ளது. எனவே அவர் அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். அதேபோல, திருமாவளவன் கடலூர்அல்லது சிதம்பரத்தில் போட்டியிடலாம்.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து மகா கூட்டணியை உருவாக்கியுள்ள திமுக, தலித் மக்களின்ஓட்டுக்களை இழக்கத் தயாராக இருக்காது என்பதால் கடைசி நேரத்தில் இரு கட்சிகளையும் கூட்டணியில்சேர்த்தாலும் சேர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும், புதிய தமிழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளிடையே நிலவுகிறது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமாக அமைந்துள்ளதால், அதை எதிர்கொள்ள அதிமுக தங்களுடன்கூட்டணி வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உள்ளது. எனவே தற்போதைக்கு ரகசியமாகவேசெயல்படுவது என்றும் அமைதி காப்பது என்றும் இரு கட்சியினரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X