சென்னை:
தமிழகத்திலுள்ள கிராமச் சாலைகளை ரூ.300 கோடி செலவில் சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது 86,580 கி.மீ. நீளத்துக்கு ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பில் சாலைகள் உள்ளன.அவற்றில் 11,171 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
அதில் 1,539 கி.மீ. நீளத்திற்கு சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. மீதமுள்ள சாலைகளில், விரைந்து சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள 5,850 கி.மீ. சாலைகளைரூ.300 கோடி செலவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










